Home /News /business /

அவசியமான தகவல்.. பிரபல வங்கிகளில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான மாற்றங்கள்!

அவசியமான தகவல்.. பிரபல வங்கிகளில் இன்று முதல் அமலுக்கு வரும் முக்கியமான மாற்றங்கள்!

பேங்க் அப்டேட்

பேங்க் அப்டேட்

bank updates : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உயர்த்தியுள்ளது

    பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் பலவற்றில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. குறிப்பாக பேங்க் ஆப் பரோடா, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் செக் கிளியரன்ஸ், கிரெடிட் கார்டு கட்டணங்கள், பண பரிமாற்றம் உள்ளிட்டவை தொடர்பான புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதில் உங்கள் அன்றாட நிதி நடவடிக்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சில முக்கிய விதிகள் குறித்து பார்க்கலாம்.

    பேங்க் ஆப் பரோடா - செக் கிளியரன்ஸ்

    பேங்க் ஆப் பரோடா வங்கியில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி, பாசிட்டிவ் பே என்ற புதிய விதி அமலுக்கு வந்துள்ளது. ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான செக் பரிவர்த்தனைகளுக்கு இந்த முறை செல்லுபடியாகும். முறைகேடான நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் பாசிட்டிவ் பே சிஸ்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

    இதில் செக் வழங்கும் வாடிக்கையாளர், இதற்கு முன்பு வழங்கிய செக் ஆவணத்தில் உள்ள தேதி, செக் நம்பர், பணம் செலுத்தப்படுபவர் பெயர், கணக்கு எண், தொகை உள்ளிட்ட விவரங்களை தற்போதைய செக் ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும். செக் மூலமாக பணம் பெற உள்ளவரின் பெயர், கட்டண தொகை விவரம், இன்டர்நெட் பேங்கிங் விவரம் உள்ளிட்ட விவரங்களை பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் குறிப்பிட வேண்டும்.

    இதையும் படிங்க.. ITR filling : 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கலாம்... வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதில் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்!

    ஐசிஐசிஐ வங்கி - கிரெடிட் கார்டு கட்டணம்

    பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கிரெடிட் கார்டு கட்டணம் ஐசிஐசிஐ வங்கியில் மாற்றப்படுகிறது. பணத்தை கடனாகப் பெறும் வாடிக்கையாளர்கள் 2.5 சதவீத கட்டணத்தை பரிவர்த்தனை கட்டணமாக செலுத்த வேண்டும். இது குறைந்தபட்சம் ரூ.500க்கு குறையாமல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டது ஆகும்.

    செக் அல்லது ஆட்டோ டெபிட் ஆவணங்கள் ரிட்டன் ஆனது என்றால், மொத்த தொகையில் 2 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும். இதுவும் குறைந்தபட்சம் ரூ.500 என்ற நிபந்தனைக்கு உட்பட்டது ஆகும். இது மட்டுமல்லாமல் கூடுதலாக ரூ.50 ஜிஎஸ்டி வரி பிடித்தம் செய்யப்படும்.

    பிஎன்பி வங்கி

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆட்டோ டெபிட் பரிவர்த்தனைகள் தோல்வி அடைந்தால் அதற்கான அபராத தொகையாக ரூ.250 செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இந்த தொகை ரூ.100 ஆக இருந்தது. இந்த விதி  பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    இதையும் படிங்க.. Union Budget 2022 Highlights: மத்திய பட்ஜெட்- முக்கிய அறிவிப்புகள்

    எஸ்பிஐ - ஐஎம்பிஎஸ் கட்டணம்

    ஐஎம்பிஎஸ் முறையில் பரிவர்த்தனை செய்யக்கூடிய பணத்தின் அளவை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உயர்த்தியுள்ளது. எனினும், ரூ.2 லட்சத்துக்கு மேற்பட்ட ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 பிளஸ் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். அதே சமயம், முன்பு போல ரூ.2 லட்சத்திற்கும் குறைவான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank accounts, Savings

    அடுத்த செய்தி