ஜனவரி 8, 9 ல் மீண்டும் வங்கிகள் வேலை நிறுத்தம்!

மாதிரிப் படம்

பாங்க் ஆப் பரொடா வங்கியும் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஊழியர்கள் விரோதக் கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் மீண்டும் ஜனவரி 8 மற்றும் 9 தேதிகளில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஐடிபிஐ வங்கி அனைத்து இந்திய ஊழியர்கள் சங்கம் மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு வேலை நிறுத்ததில் ஈடுபட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

தனியாகப் பாங்க் ஆப் பரோடா வங்கியும் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் ஊழியர்கள் சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் போராட இருப்பதாக மும்பை பங்குச்சந்தைக்குத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இரண்டு நாட்கள் வங்கி சேவைகள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால், அவசர வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய உள்ளவர்கள் 7-ம் தேதி திங்கட்கிழமைக்குள் செய்துகொள்வது நல்லது.

INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, AICCTU, UTUC, TUCC, LPF மற்றும் SEWA என மத்திய அரசு ஊழியர்கள் சங்கங்களும் ஜனவரி 8 மற்றும் 9-ம் தேதிகளில் தேசிய அளவில் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முன்னதாக வங்கிகள் இணைப்பு, ஊதிய உயர்வு போன்ற காரணங்களை வழியுறுத்தி 2018 டிசம்பர் 21 மற்றும் 26-ம் தேதிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பார்க்க: ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ருசிகர கறி விருந்து
Published by:Tamilarasu J
First published: