வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு... சேவைகள் பாதிக்கும் அபாயம்

கோப்புப்படம்.

கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் ஏப்ரல் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வங்கி ஊழியர் சங்கம் எச்சரித்துள்ளது.

 • Share this:
  ஊதிய உயர்வு கோரி வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 31-ம் தேதி முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது

  வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் 15 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், இதனை ஏற்க மறுத்துவிட்ட இந்திய வங்கிகள் சங்கம், 12.25 சதவீத ஊதிய உயர்வு மட்டுமே வழங்க முடியும் என்று அறிவித்தது.

  இதுதொடர்பாக கடந்த 13-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால், வரும் 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  Also Read : அடேங்கப்பா... பெரிய வித்தக்காரரா இருப்பார் போலருக்கு ! - வைரல் வீடியோ

   
  Published by:Sankaravadivoo G
  First published: