• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • இன்று முதல் ’பணம்’ சம்பந்தமான மாற்றங்கள் அமல்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இன்று முதல் ’பணம்’ சம்பந்தமான மாற்றங்கள் அமல்... அவசியம் தெரிஞ்சிக்கோங்க

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாடு முழுவதும் வங்கிகள், ஏடிஎம் கார்ட்கள் பயன்பாட்டில், இன்று முதல் பல்வேறு புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

  • Share this:
    ஏடிஎம் கட்டணம், மாதச் சம்பளம் பெறுவது, மாதத் தவணை செலுத்துவது, ஐசிஐசிஐ மற்றும் IPPB ஆகிய வங்கிகளில் சேவை கட்டணம் போன்றவற்றில் ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலாகின்றன.

    அதன்படி, வங்கிகளின் வேலை நாட்களில் மட்டும் இயங்கி வந்த, என்ஏசிஎச் எனப்படும் தேசிய தானியங்கி பணப்பரிவர்த்தனை முகமை ஆகஸ்ட் 1 முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் இ.எம்.ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, இனி வேலை நாட்களுக்காக காத்திருக்க வேண்டியதில்லை.

    உதாரணமாக மாதச் சம்பளதாரர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட இனி சம்பளப் பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். மேலும், மின் கட்டணம், எரிவாயு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவற்றையும், அனைத்து நாட்களிலும் செலுத்துதற்கு ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    ஏடிஎம்களில் சில இலவச சேவை போக பண பரிமாற்றத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணம் தற்போதைய 15 ரூபாயிலிருந்து 17 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோன்று, பணமில்லா மற்ற பரிமாற்றத்திற்கான கட்டணம், ஐந்திலிருந்து ஆறு ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.

    இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியும், தனது கட்டண கொள்கைகளில் புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, இதுவரை இலவசமாக இருந்த வீடு தேடி வரும் வங்கி சேவைகளுக்கு, இனி கட்டணமாக 20 ரூபாயுடன் அதற்கான ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று ஐசிஐசிஐ வங்கியிலும், பல்வேறு புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. அதன்படி, ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனைகள் முடிந்த பிறகு, ஒவ்வொரு பண பரிமாற்றத்திற்கும் 20 ரூபாயும், பணமில்லா மற்ற பரிவர்த்தனைக்கு 8.50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சம்பளத்திற்கான வங்கிக் கணக்கில் இருந்து இலவச பரிவர்த்தனைகளுக்கு பிறகான, ஒவ்வொரு பரிமாற்றத்திற்கும் 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. ஒரு வருடத்திற்கு 25 காசோலைகளுக்கு கட்டணம் இல்லை எனவும், அதற்கு மேற்பட்ட 10 காசோலைகளை கொண்ட ஒவ்வொரு புத்தகத்திற்கும், 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: