ஹோம் /நியூஸ் /வணிகம் /

நாளை முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்... ATM சேவையும் முடங்கும் அபாயம்...!

நாளை முதல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்... ATM சேவையும் முடங்கும் அபாயம்...!

 கோப்பு படம்

கோப்பு படம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஊதிய உயர்வை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் அடுத்த 2 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இந்திய வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்றக இந்திய வங்கிகள் சங்கம் மறுத்துவிட்டது.

இந்நிலையில் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததால் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் பல்வேறு வங்கி ஊழியர்களின் சங்கம் பங்கேற்க உள்ளது. அதிலும் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளின் சேவை அடுத்த 2 நாட்களுக்கு பாதிக்கப்படலாம். நாடு முழுவதும் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மாத இறுதி நாளான நாளை மற்றும் சனிக்கிழமை வங்கி சேவைகள் பாதிக்கப்படும். அடுத்த நாள் ஞாயிறு என்பதால் 3 நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் அபாயமும் ஏ.டி.எம் முடங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

First published:

Tags: Bank Strike