Home /News /business /

Bank Strike: எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Bank Strike: எஸ்பிஐ, இந்தியன் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

பேங்க் ஸ்டிரைக்

பேங்க் ஸ்டிரைக்

Bank Strike: பொதுத்துறை வங்கிகளின் போராட்டம் அறிவித்துள்ளன; தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படும்.

    எஸ்பிஐ, இந்தியன் வங்கி, பஞ்சாப் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இந்த தகவலை தெரிந்து கொள்ள வேண்டும். வரும் டிசம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் நாடு முழுவதும் 2 நாட்கள்  பொதுத்துறை வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.

    பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்த வங்கி ஊழியர்கள் இந்த 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவுருத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த இரண்டு நாட்களில் வங்கி சேவையானது தடைபடலாம் எனவே வாடிக்கையாளர்கள் பணபரிவர்த்தனை, வங்கியில் செக் டெபாசிட் போன்ற வேலைகள் இருந்தால் அதை சீக்கிரமாக முடிந்து கொள்ளவும் அல்லது அதற்கேற்ப முன்பே திட்டமிட்டு கொள்வதும் நல்லது. ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படுமா? என்ற கேள்வியும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

    டிசம்பர் 16 மற்றும் டிசம்பர் 17ம் தேதிகளில் அறிவித்தப்படியே போராட்டம் நடைப்பெறும் என வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 2021 - 2022 பட்ஜெட்டில் பல்வேறு சீர்திருத்த காரணங்களுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் தெரிவிக்கப்பட்டது. . இதற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. விவாதங்களும் அரங்கேறின.

    இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்கள் தொடர்ந்து அதிருப்தியில் இருந்த நிலையில் மத்திய அரசின் வங்கிகளை தனியார்மயமாக்கும் முடிவை எதிர்த்து, வரும் டிசம்பர் 16 மற்றும் 17ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தை வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கான சமாதான பேச்சுவார்த்தை ஏற்கெனவே நடந்து முடிந்த நிலையில் அதில் முடிவு எட்டப்பாடதால் இந்த வங்கி ஸ்டிரைக் திட்டமிட்டபடி நடக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இது பொதுத்துறை வங்கிகளின் போராட்டம் என்பதால், தனியார் வங்கிகள் வழக்கம்போல செயல்படலாம். யு.எப்.பி.யு., எனப்படும் வங்கி சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு என்ற அமைப்பு வங்கி ஊழியர்களின் போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்களின் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் ”இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பான, வங்கிகள் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறவுள்ளது” என்று கூறியுள்ளார்.

    அதே நேரம், நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, தனது வங்கி ஊழியர்களிடம் இந்த போராட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யும் படியும், வாடிக்கையாளர்களின் வங்கி சேவை குறித்து யோசிக்கும் படி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank, Bank Strike, SBI

    அடுத்த செய்தி