ஹோம் /நியூஸ் /வணிகம் /

வீட்டுக்கடன் வாங்கப்போறீங்களா.. வட்டி விகிதத்தை குறைத்துள்ள பாங்க் ஆஃப் பரோடா..

வீட்டுக்கடன் வாங்கப்போறீங்களா.. வட்டி விகிதத்தை குறைத்துள்ள பாங்க் ஆஃப் பரோடா..

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை பாங்க் ஆஃப் பரோடா வங்கி குறைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களில் ரெப்போ விகிதத்தை நான்கு முறை உயர்த்தியுள்ளது. இதற்கிடையில் வீட்டுக் கடனை எதிர்பார்க்கும் தனிநபர்களுக்கு நல்ல செய்தியாக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  நவம்பர் 14, 2022 முதல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்த வங்கி அதன் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் வாங்குபவர்களுக்கு வங்கி வீட்டுக் கடனை 0.25 சதவீதம் குறைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

  வங்கியின் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அடிப்படை புள்ளிகள் 25 bps குறைக்கப்பட்டு ஆண்டுக்கு இப்போது 8.25 சதவீதத்தில் இருந்து தொடங்குகிறது. BoB-ன் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு தற்போது 8.25 சதவீதமாக உள்ள நிலையில் SBI மற்றும் HDFC வழங்கும் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.40 சதவீதமாக உள்ளது.

  புதிய வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு விகிதம் கிடைக்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு தள்ளுபடி வட்டி விகிதம் வரும் டிசம்பர் 31, 2022 வரை கிடைக்கும் என்று வங்கி கூறி இருக்கிறது.

  வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தில் 25 bps தள்ளுபடியைத் தவிர, வங்கி செயலாக்க கட்டணத்தையும் (பேங்க் ப்ராசஸிங் சார்ஜ்) தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருக்கிறது. கடனுக்கான வட்டி விகிதங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், வரையறுக்கப்பட்ட காலம் வரை சிறப்பு வீட்டுக் கடன் வட்டி விகிதம் (8.25%) வழங்குவதில் உண்மையில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று அறிக்கையில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி கூறி இருக்கிறது.

  நகர்ப்புறங்களில் வீடுகளுக்கான வலுவான தேவை மற்றும் நுகர்வோர் நம்பிக்கை காரணமாக வீட்டுக் கடன்களில் இந்த ஆண்டு வலுவான வளர்ச்சியை எங்கள் வங்கி கண்டுள்ளது. வீடு வாங்க திட்டமிட்டிருக்கும் மக்கள் தங்கள் சொந்த வீட்டு கனவை நனவாக்கி கொள்ள எங்களது இந்த சிறைப்பட்டு சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் வீட்டுக் கடன்களில் இத்தகைய கவர்ச்சிகரமான சலுகைகள் வீடு வாங்க நினைப்போருக்கு ஊக்கமளிக்கும் என வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  வருமான வரி சேமிப்பு எஃப்டிகள்... வட்டி அள்ளிக்கொடுக்கும் டாப் வங்கிகளின் லிஸ்ட்!

  எங்களுடைய வீட்டு கடன் வட்டி விகிதம் இப்போது தொழில்துறையில் மிகக் குறைந்த மற்றும் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த வீட்டுக் கடன் வட்டி விகிதங்களில் ஒன்றாக இருக்கிறது என வங்கியின் உயரதிகாரிகளில் ஒருவரான எச்டி சோலங்கி கூறி இருக்கிறார்.

  புதிய விகிதங்கள் பேலன்ஸ்களை ட்ரான்ஸ்ஃபர் செய்ய விரும்புவோருக்கும் பொருந்தும், மேலும் சிறப்பு விகிதம் கடனாளியின் கிரெடிட் ப்ரொஃபைலுடன் இணைக்கப்பட்டுள்ளது. வீட்டு கடன்களில் வலுவான வளர்ச்சி காணப்படும் நிலையில் எங்களது இந்த சிறப்பு தள்ளுபடி விகிதம் ஏற்கனவே இருக்கும் அதிக தேவைக்கு மேலும் வலு சேர்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

  QR code பயன்படுத்தி ATM-ல் இருந்து பணம் எடுப்பது எப்படி.? முழு விவரம்.!

  பாங்க் ஆஃப் பரோடா வழங்கும் வீட்டுக் கடன்களின் முக்கிய அம்சங்கள் கீழே:

  - முக்கிய சென்டர்களில் டோர் ஸ்டெப் சர்விஸ்

  - ப்ரீ பேமென்ட்/ பார்ட் பேமென்ட் சார்ஜஸ் இல்லை

  - குறைந்தபட்ச ஆவணங்களுடன் வீட்டு கடன்களை பெறலாம்

  - ஜீரோ ப்ராசஸிங் சார்ஜஸ்

  - டிசம்பர் இறுதி வரை ஆண்டுக்கு 8.25% வட்டி விகிதங்கள்

  Published by:Srilekha A
  First published:

  Tags: Home Loan