ஹோம் /நியூஸ் /வணிகம் /

3 அல்லது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI-களை வழங்கும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி - எப்படி தெரியுமா?

3 அல்லது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI-களை வழங்கும் பேங்க் ஆஃப் பரோடா வங்கி - எப்படி தெரியுமா?

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா

Bank of Baroda No Cost of EMI : பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு குறிப்பிட்ட மாதங்களுக்கு கட்டணமில்லா EMI வழங்குகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பேங்க் ஆஃப் பரோடா (BOB) வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா EMI-களைப் (No Cost EMI) வழங்குகிறது. இது குறித்து தனது வாடிக்கையாளர்களுக்கு சில அறிவிப்புகளை தெரிவித்து உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, பயண முன்பதிவுகளை முன்னணி பயண கூட்டாளர்களான யாத்ரா, MMT, கிளியர்ட்ரிப், EMT ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செய்வதன் மூலம் பல சலுகைகளுடன் முன்பதிவு செய்யலாம் என்று தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

பொதுவாக கட்டணமில்லா EMIகள், அடுத்த பில்லிங் சுழற்சியில் வாடிக்கையாளர்களின் பட்ஜெட் சுமையை குறைக்க உதவும். மேலும் பிற செலவுகளுக்குச் செலவழிக்க அதிக கிரெடிட் கார்டு இருப்புடன் வெளியேறும்போது, மாதாந்திர கிரெடிட் கார்டு வரம்பை அதிகமாகச் சேமிக்க உதவுகிறது. குறிப்பாக “கொரோனா தொற்றுக்கு பிறகு அதிக பேர் பயணங்கள் செய்து வருகின்றனர்.மேலும் விடுமுறை மற்றும் திருமண சீசன் பயணங்கள், விருந்தோம்பல் சார்ந்த பயணங்கள் அதிக செலவுகளை உருவாக்குகிறது.

இருப்பினும், இன்றைய வாடிக்கையாளர்கள் பணத்திற்கான மதிப்பை அதிகம் நாடியுள்ளதால், பயணங்கள் அல்லது ஓய்வுநேரச் செலவுகளைச் செய்யும்போது முன்னெப்போதையும் விட அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறார்கள்,” என்று பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமை அதிகாரியான ஷைலேந்திர சிங் குறிப்பிட்டார்.

மேலும், இதுகுறித்து கூறுகையில் "வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் ஒட்டுமொத்த பட்ஜெட் சேமிப்புகளை பற்றி அறிந்து, இன்றைய பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ற சலுகைகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். எங்களின் பரந்த கிரெடிட் கார்டு போர்ட்ஃபோலியோ, பெரிய பரிவர்த்தனைகளில் அதிகபட்ச சேமிப்பு மற்றும் வெகுமதிகளை உறுதிசெய்கிறது.

அத்துடன், ஸ்மார்ட் EMI நன்மையின் மூலம் எளிதாக இவற்றை திருப்பி செலுத்த முடியும்,” என்று அவர் கூறினார். அனைத்து பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டுகளுக்கும் ஸ்மார்ட் EMIகள் செல்லுபடியாகும். பயணம், உணவு மற்றும் சர்வதேச செலவினங்களில் துரிதப்படுத்தப்பட்ட வெகுமதி புள்ளிகள்: BoB ETERNA & BoB VARUNAH பிரீமியம் கிரெடிட் கார்டுகளில் ரூ.100க்கு 15 ரிவார்டு புள்ளிகளைப் பெறலாம்.

Also Read : ‘10 நிமிடத்தில் உணவு டெலிவரி‘ திட்டத்தை கைவிடுகிறது ஜொமாட்டோ… என்ன காரணம் தெரியுமா?

மேலும் BoB PREMIER & BoB VARUNAH PLUS கிரெடிட் கார்டுகளில் ரூ.100க்கு 10 ரிவார்டு புள்ளிகளைப் பெறலாம். இலவச விமான நிலைய லாஞ்ச் அணுகலுக்கு ஆண்டுதோறும், BoB VARUNAH PLUS-இல் 12 வருகைகள் மற்றும் BoB பிரீமியர் கிரெடிட் கார்டில் 4 வருகைகள் என்று குறிப்பிட்டுள்ளனர்.

HPCL BoB ENERGIE கிரெடிட் கார்டு பயன்படுத்தி விமானப் பயணத்தை மட்டும் நீங்கள் சேமித்து கொள்ளலாம். HPCL கார்டு வகையானது சில்லறை விற்பனை நிலையங்களில் எரிபொருள் வாங்குவதில் 5% வரை சேமிப்பைப் பெற உதவும். மேலும் 4 இலவச விமான நிலைய லாஞ்ச் வருகைகளையும் இது வழங்குகிறது.

First published:

Tags: Bank Loan, Bank of Baroda, Credit Card, EMI