பொதுத்துறை வங்கியான பாங்க் ஆஃப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தனது வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை வங்கிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் பாதுகாப்பான முதலீடாக ரியல் எஸ்டேட் உள்ளது. அதனால் தான் வங்கிகளில் வீட்டு கடனுக்கான வட்டி விகிதங்களை அவ்வப்போது குறைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்திழுக்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாங்க் ஆஃப் பரோடா வங்கி பண்டிகை கால சலுகையாக வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது.
அப்போது நடைமுறையில் இருக்கும் 6.75 சதவீத வட்டி விகிதத்தில் இருந்து 0.25 சதவீதத்தை குறைத்து 6.50 சதவீதம் வரையில் குறைப்பதாக அறிவித்தது. தற்போது மீண்டும் வீட்டுக்கடனுக்கான வட்டியை பாங்க் ஆஃப் பரோடா குறைத்தது. இது பண்டிகை கால ஆஃபராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு 6.75 ஆகவே வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டது. தற்போது அதே போல் மீண்டும் வீட்டு கடனுக்கான வட்டியில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 25 சதவீதம் வரை குறைப்பதாக ஃபாங்க் ஆஃப் பரோடா நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது முந்தைய ஆண்டு வட்டி விகிதம் 6.75 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 6.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என பாங்க் ஆஃப் பரோடா வங்கி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 22 அன்று வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் பரோடா இன்று தனது வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை 6.75 சதவீதத்தில் இருந்து 6.50 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விகிதம் ஜூன் 30ம் தேதி வரை மட்டுமே வரை பொருந்தும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்களுக்கும் செயலாக்கக் கட்டணத்தில்( Processing fees) தள்ளுபடியும் கிடைக்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வீட்டுக்கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு செயலாக்கக் கட்டணங்களில் 100% தள்ளுபடியையும் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம், அதிகளவிலான வர்த்தகத்தை வீட்டுக் கடன் பிரிவில் பெற வேண்டும் என்பதால் சக போட்டி நிறுவனங்களை விடவும் குறைவான வட்டி விகிதத்தை அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 6.50 சதவீதத்தில் தொடங்கும் புதிய வட்டி விகிதம், புதிதாக வீட்டுக்கடன் வாங்க விண்ணப்பிப்பவர்களும், வீடு கட்டுவதற்காக இருப்புப் பரிமாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்ட உள்ளது. மேலும் இந்த சிறப்பு வட்டி விகிதம் அனைத்து கடன் தொகைகளுக்கும் கிடைக்கும் என்றும், கடன் வாங்குபவரின் கடன் சுயவிவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு விகிதம் அனைத்து கடன் தொகைகளிலும் கிடைக்கிறது மற்றும் கடன் வாங்குபவரின் கடன் சுயவிவரத்துடன் (Borrower's credit profile) இணைக்கப்பட்டுள்ளது, பொதுத்துறை கடன் வழங்குபவர் மேலும் கூறினார்.
சுவாரஸ்யமாக, பாங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதக் குறைப்பு அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, வங்கி அதன் MCLR அல்லது நிதி அடிப்படையிலான கடன் வட்டி விகிதங்களின் விளிம்பு விலையை 0.05 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்தது. பேங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடன்கள், ரிசர்வ் வங்கியின் பாலிசி ரெப்போ விகிதத்துடன் வெளிப்புற அளவுகோலுடன் இணைக்கப்பட்டுள்ளன.
அதிர்ஷ்டவசமாக பாங்க் ஆஃப் பரோடா வீட்டுக் கடனுக்கான வட்டி விகித குறைப்பை அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு வங்கி நிர்வாகம் அதன் எம்சிஎல்ஆர் விகிதத்தை அதிகரித்தது. இது வங்கிகள் நுகர்வோர் கடன் விகிதங்களை தீர்மானிக்க பயன்படுத்தும் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த உட்புற குறிப்பு விகிதமாகும். இதன் அடிப்படையில் தான் ஏற்கனவே கொடுக்கப்பட்ட கடன் மற்றும் புதிய கடன்களுக்கும் வட்டி விகிதம் மாறும். இதனை 0.5 சதவீதம் வரை பாங்க் ஆஃப் பரோடா வங்கி அதிகரித்துள்ளது.
Also read... கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட RBI
வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் குறைப்பு பற்றி BOB அடமானங்கள் மற்றும் இதர சில்லறைச் சொத்துகள் பொது மேலாளர் ஹெச் டி சோலங்கி கூறுகையில், "கடந்த பல மாதங்களாக வீட்டு விற்பனையில் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளோம், மேலும் நல்லதை நீட்டிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வீடு வாங்குபவர்களுக்கு சிறப்பு மறூம் வரையறுக்கப்பட்ட காலகட்ட வட்டி விகித சலுகையாக 6.50 சதவீதமும், ஜீரோ புராசசிங் சார்ஜும் வழங்கப்பட உள்ளது. இந்த கவர்ச்சிகரமான சலுகையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் தங்கள் கனவு வீட்டை வாங்குவதற்கான வேகம் அதிகரிக்கும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
பாங்க் ஆப் பரோடாவின் வீட்டுக் கடன் போர்ட்ஃபோலியோ டிசம்பர் 2021ம் ஆண்டின் இறுதியில் 6.57 சதவீதமாக உயர்ந்து ரூ.76,898 கோடியாக இருந்தது. கூடுதலாக, மொத்த சில்லறை கடன் இலாகா 11.13 சதவீதம் அதிகரித்து ரூ.1,28,960 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.