• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம்... இன்னும் 3 நாட்களில் வர போகும் வாய்ப்பு!

குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம்... இன்னும் 3 நாட்களில் வர போகும் வாய்ப்பு!

குறைந்த விலையில் வீடு

குறைந்த விலையில் வீடு

இதற்கான தகுதி பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓபன் செய்து கொள்ளலாம்.

  • Share this:
    வீடு, சொத்து வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் வரும் அக் 22 ஆம் தேதி இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். குறைந்த விலையில் வீடு, சொத்து வாங்க இதுவே சரியான நேரம்.

    பேங்க் ஆஃப் பரோடா வங்கி வரும் அக்டோபர் 22 ஆம் தேதி ஒரு மெகா ஆன்லைன் ஏலத்தை நடத்தவுள்ளது. இதில், மிகக் குறைந்த விலையில் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு சொத்துகளை வாங்கலாம்.ஏலத்தில் சொத்துகளை வாங்குவோருக்கு உடனடியாக சொத்து கைமாற்றப்படும். மேலும், சொத்தை வாங்குவதற்கு ஈசியான நிபந்தனைகளுடன் கடன் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.இதில் நீங்கள் லாபமும் பார்க்கலாம். புரோக்கர் வழியாகவோ ஆப்ஸ் வழியாகவோ சொந்த வீட்டை தேடி அலைவதை விட்டுவிடுங்கள். இதில் கமிஷன் பிரச்சனையுண்டு. ஆனால் இதுப்போன்ற வங்கி ஏலத்தில் கலந்துகொண்டு வீட்டை வாங்குவது முடிந்த அளவு செலவை குறைக்கும்.

    வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை வாங்க விரும்புவோர் குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பு. இங்கு மார்க்கெட் விலையைக்காட்டிலும் குறைந்த விலையில் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் , கடனை சரியாக திருப்பிச் செலுத்தாதவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பல்வேறு சொத்துகள் விற்பனைக்கு வரும்.வீடுகள், ஃப்ளாட்டுகள், நிலம், வணிக சொத்துகள் என பலவகை சொத்துகள் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட தொகையில் ஏலம் விடப்படும். விருப்பப்படுவோர் வாங்கலாம். இதற்கான தகுதி பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் ஓபன் செய்து கொள்ளலாம். மொபைல் நம்பர், இமெயில் ஐடி ஆகியவற்றை வெரிஃபை செய்துகொண்டு ஏலத்துக்கு செல்லலாம்.

    இந்த வீடு மற்றும் சொத்துக்கள் SARFAESI சட்டத்தின் கீழ் ஏலத்தில் விற்கப்படுகின்றன. இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சொத்துகள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் விவரங்களுக்கு வங்கியின் இணையளத்தில் சென்று பார்த்தால் ஏலம் குறித்த விளம்பரம் இடம் பெற்றிருக்கும் . https://www.bankofbaroda.in/e-auction.htm?utm_source=SM&utm_medium=Post&utm_campaign=MegaAuction_km இந்த லிங்கில் சென்றும் பார்க்கலாம். தேவைப்பட்டால் அருகில் இருக்கும் பேங்க் ஆஃப் பரோடா வங்கிக்கு சென்றும் விசாரிக்கலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: