கடந்த பிப்ரவரி 1ம் தேதி பேங்க ஆஃப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை அறிவித்திருந்தது. அதன் படி செக் கிளியரன்ஸ் தொடர்பான பேங்க் ஆஃப் பரோடாவின் விதிகள் மாற்றப்பட்டன. பிப்ரவரி 1 முதல் காசோலையின் பேமெண்டுக்கு உறுதிப்படுத்தல் கட்டாயம் என அறிவித்தது. காசோலைக்கான தொகை உறுதி செய்யப்படவில்லை என்றால், காசோலை திரும்ப அனுப்பப்படும் என்றும், ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட காசோலைகளுக்குதான் இந்த விதிகள் பொருந்தும் என்றும் அறிவித்திருந்தது.
மேலும் பாங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்காக பாசிடிவ் பே கன்ஃபர்மேஷனுக்காக 8422009988 என்ற எண்ணையும் அறிவித்திருந்தது. இந்த எண்ணுக்கு வாடிக்கையாளர் தமது
கணக்கு எண், காசோலை எண், காசோலை கணக்கு விபரம், அதன் தேதி, பரிவர்த்தனை குறியீடு, பணம் பெறுபவரின் பெயர் போன்ற விவரங்களை அனுப்பினால், காசோலை உறுதிபடுத்தப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மற்றொரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எஸ்பிஐ, மற்றும் தனியார் கடன் வழங்கும் நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியவற்றை தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா வங்கியும் தனது பிக்சட் டெபாசிட் (எஃப்டி) வட்டி விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் தொடங்க நினைப்பவர்கள், தொடங்கியவர்கள் இதை தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது!
பொதுத்துறை வங்கிகள் பிப்ரவரி 25 முதல் நிலையான வைப்புத்தொகைகளுக்கான (FDs) வட்டி விகிதங்களைத் அமலுக்கு கொண்டு வர உள்ளனர். இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, பாங்க் ஆஃப் பரோடாவின் சமீபத்திய FD வட்டி விகிதங்கள் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுக்கு 2.80 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை இருக்கும். பேங்க் ஆஃப் பரோடா 7 நாட்கள் முதல் 45 நாட்களில் முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 2.80 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
முதிர்வு காலம் 46 நாட்கள் முதல் 180 நாட்கள் மற்றும் 181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை உள்ள ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பாங்க் ஆப் பரோடா வங்கி முறையே 3.7 சதவீதம் மற்றும் 4.30 சதவீத வட்டியை வழங்குகிறது. 271 நாட்கள் அல்லது அதற்கு மேல் ஆனால் 1 வருடத்திற்கும் குறைவான காலத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 4.4 சதவீத வட்டியும், ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு 5 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது.
பேங்க் ஆஃப் பரோடா 1 ஆண்டுக்கு மேல் மற்றும் மூன்று
ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 5.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 5 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்களுக்கு அதிகபட்சமாக 5.25 சதவீத விகிதத்தை வழங்குகிறது. 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு பாங்க் ஆப் பரோடா 5.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான
ஃபிக்சட் டெபாசிட் மீதும் சிறப்பு வட்டி விகிதத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு ரூ.2 கோடிக்கும் குறைவான உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கு 0.50 சதவீதம் கூடுதல் வட்டி கிடைக்கும்.
இதையும் படின்ம்க்க.. அதிர்ச்சி தரும் பெர்சனல் லோன் பற்றிய உண்மைகள்.. இனியாவது கவனமாய் இருங்கள்!
- 7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 2.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.30 சதவீதம்
- 15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 2.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3 சதவீதம்
- 30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
- 91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை: பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.