• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • நினைத்து பார்க்க முடியாத குறைந்த விலை...சொத்து வாங்க உங்களுக்கு வாய்ப்பு!

நினைத்து பார்க்க முடியாத குறைந்த விலை...சொத்து வாங்க உங்களுக்கு வாய்ப்பு!

சொந்த வீடு வாங்க வாய்ப்பு

சொந்த வீடு வாங்க வாய்ப்பு

சொத்துக்களை வாங்க உங்களுக்கு கடன் தேவை என்றாலும் அதற்கு வங்கி ஏற்பாடு செய்து தரும்

  • Share this:
    குறைந்த விலையில் வீடு, சொத்து வாங்க அருமையான வாய்ப்பை பிரபல வங்கியான பாங்க் ஆஃப் பரோடா வழங்குகிறது. யூஸ் பண்ணிக்கோங்க.

    வீடு என்பது பலரின் வாழ்நாள் கனவு என்றே சொல்லலாம். ஆனால் இருக்குற பொருளாதாரத்தை பார்க்கையில் மணல், ஜல்லி, சிமெண்ட் வாங்கி வீடு கட்டுவதுக்குள் நாக்கு தள்ளிடும் போல. அதிலும் குறிப்பாக லோன் வாங்கி வீடு கட்ட நினைக்கும் மிடில் கிளாஸ் மக்களிடன் பட்ஜெட்டில் துண்டு விழவும் வாய்ப்பு உள்ளது. இந்த நேரத்தில் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசிக்க வேண்டியது அவசியம். அதாவது, கட்டிய வீடுகளை வாங்கினால் லாபம். அதிலும் வங்கி ஏலம் விடும் வீடுகள், சொத்துக்களை வாங்கினால் கூடுதல் லாபம் உங்களுக்கு தான்.

    அந்த வகையில் குறைந்த செலவில் வீடு அல்லது சொத்து வாங்க வேண்டுமா? இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேங்க் ஆஃப் பரோடா ஒரு மெகா ஆன்லைன் ஏலத்தை நடத்த உள்ளது. இதில் பல ஏராளமான சொத்துக்கள், வீடுகள், நிலங்கள் ஏலம் விடப்பட உள்ளன. விற்பனைக்கு வரும் இந்த சொத்துக்களை வாங்கினால் நீங்கள் பயனடையலாம். இந்த ஏலத்தின் மூலம் இந்தியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் சொத்துகளை வாங்க முடியும். இந்த மெகா ஏலத்தில் நீங்கள் சொத்துக்களை வாங்க நினைத்தால் https://ibapi.in/ இந்த வலைத்தளத்தில் சென்று பார்க்கவும்.

    மேலும் படிக்க.. சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தனியார் வங்கி தரும் ஒரு வாய்ப்பு!

    மார்க்கெட் விலையை காட்டிலும் மிக குறைந்த விலைக்கு வீடு, நிலம் ஆகியவற்றை இங்கு வாங்கலாம். அதே போல் வங்கியால் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அதன் விலை குறித்த விவரங்களையும் இந்த வலைத்தளத்தில் பார்க்கலாம். வீடுகள் பிளாட்டுக்கள், அலுவலக இடங்கள், தொழில் துறை சார்ந்த இடங்கள் என அனைத்தையும் இங்கு வாங்க முடியும். ஒருவேளை இந்த சொத்துக்களை வாங்க உங்களுக்கு கடன் தேவை என்றாலும் அதற்கு வங்கி ஏற்பாடு செய்து தரும் என்பது கூடுதல் தகவல். அதில் லோன் அப்ளை செய்து சொத்துக்களை வாங்க முடியும்.

    விருப்பமுள்ளவர்கள் வங்கியின் https://ibapi.in/ தளத்திற்கு சென்று பார்க்கவும். அல்லது கூடுதல் விவரங்களுக்கு வங்கியை தொடர்பு கொண்டும் கேட்டறியலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: