ஹோம் /நியூஸ் /வணிகம் /

பேங்க் லாக்கரை வாடகைக்கு எடுக்க போறீங்களா? இதை தெரிஞ்சிகிட்டு போங்க

பேங்க் லாக்கரை வாடகைக்கு எடுக்க போறீங்களா? இதை தெரிஞ்சிகிட்டு போங்க

பேங்க் லாக்கர்

பேங்க் லாக்கர்

லாக்கர்கள் இருக்கும் ரூமிற்கு வந்து செல்வோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நாட்டின் பல இடங்களில் நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து காணப்படுகின்றன. எனவே மக்கள் தங்கள் உழைப்பில் வாங்கி சேமித்து வைக்கும் நகைகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்களை வீட்டில் சேமித்து வைப்பதை விட, பேங்க் லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருக்கவே விரும்புகிறார்கள்.

  நீங்கள் உங்கள் மதிப்புமிக்க பொருட்களை பேங்க் லாக்கர் மூலம் பாதுகாக்க திட்டமிட்டு வந்தால், நிச்சயம் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய பேங்க் லாக்கர் விதிகள் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஏனென்றால் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பேங்க் லாக்கர் தொடர்பான விதிகளை மாற்றியது. புதிய விதிகள் இந்தாண்டு (2022) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. ஏற்கனவே பேங்க் லாக்கர் வைத்திருப்பவர்கள் எதிர்கொண்ட குறைபாடுகளை கவனத்தில் எடுத்து கொண்ட பிறகு, தற்போது நடைமுறையில் உள்ள புதிய விதிகள் நுகர்வோருக்கு உகந்தவையாக வெளியிடப்பட்டுள்ளன.

  அடுத்த மாதம் முதல் நடைமுறைக்கு வரும் புது ரூல்ஸ்.. டெபிட், கிரெடிட் யூசர்கள் நோட் பண்ணிக்கோங்க!

  நுகர்வோர் அனுபவத்தை மிகவும் பாதுகாப்பாக மாற்றும் வகையிலான தற்போதைய பேங்க் லாக்கர் விதிகள்:

  வாடகை:

  அதிகபட்சம் ஒரே நேரம் மூன்று ஆண்டுகளுக்கான லாக்கர் வாடகையை தான் நுகர்வோரிடம் வங்கிகள் வசூலிக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் எடுக்க விரும்பும் லாக்கரின் வாடகை ஆண்டுக்கு ரூ.2000 என்றால், மற்ற பராமரிப்புக் கட்டணங்கள் தவிர்த்து, ரூ.6000-க்கு மேல் வங்கி உங்களிடம் வசூலிக்க கூடாது.

  SMS அலர்ட்ஸ்..

  மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை தங்கள் லாக்கரை அணுகும் போதும், குறிப்பிட்ட வங்கி மூலம் SMS மற்றும் இமெயில் மூலம் அவர்களுக்கு அலர்ட் செய்யப்படும். லாக்கர் செயல்பாட்டின் தேதி மற்றும் நேரம் மற்றும் அங்கீகரிக்கப்படாத லாக்கர் அணுகல் நடந்தால் கிடைக்கும் தீர்வு வழிமுறை உள்ளிட்டவற்றை உறுதிப்படுத்தும் வகையில், வங்கிகள் பதிவு செய்யப்பட்ட இமெயில் ஐடி மற்றும் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணுக்கு இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்டை அனுப்பும்.

  போஸ்ட் ஆபீஸில் மட்டுமே இது சாத்தியம்..7 நாள் முதல் 1 ஆண்டு திட்டத்திற்கு 5.50% வட்டி!

  திருட்டு சம்பவங்களுக்கு இழப்பீடு:

  முன்பு இருந்த பேங்க் லாக்கர் விதிகளின்படி லாக்கரில் உள்ள பொருட்கள் திருடப்பட்டால் அல்லது ஏதேனும் சேதமடைந்தால் அதற்கு வங்கிகள் பொறுப்பேற்காது. அவர்களிடமிருந்து நுகர்வோரால் நிதி இழப்பீடு கோர முடியாது. ஆனால் இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதிகளின்படி, லாக்கரில் வைக்கப்படும் நுகர்வோரின் பொருட்கள் திருடப்பட்டால் அல்லது சேதமடைந்தால் வருடாந்திர லாக்கர் வாடகையை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளருக்கு குறிப்பிட்ட வங்கி இழப்பீடாக செலுத்த வேண்டும். வங்கி லாக்கர்களில் திருட்டு நடப்பதாக எழுந்த புகார்கள் அதிகமானதை தொடர்ந்து இந்த விதி அமலுக்கு வந்துள்ளது.

  வெளிப்படைத்தன்மை:

  பொதுத்துறை துறைகளை பொறுத்த வரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருந்தது கவலைக்குரியதாக இருந்தது. திருட்டு சம்பவங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று வங்கிகள் சொல்லி வந்தன. இதனிடையே பேங்க் லாக்கர் தொடர்பான தனது உத்தரவில் ரிசர்வ் வங்கி வெளிப்படைத்தன்மையை பராமரிக்க காலி லாக்கர்களின் பட்டியலையும், லாக்கரின் காத்திருப்பு பட்டியல் எண்ணையும் வங்கிகள் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளது.

  கண்காணிப்பு:

  லாக்கர்கள் இருக்கும் ரூமிற்கு வந்து செல்வோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிப்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. தவிர சிசிடிவி காட்சிகளின் ஃபுட்டேஜ்களை 6 மாதங்களுக்கு சேமித்து வைக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் அல்லது திருட்டு சம்பவங்கள் நடந்தால் போலீஸ் விசாரணைக்கு இந்த சிசிடிவி காட்சிகள் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Bank Locker, Reserve Bank of India