Home /News /business /

Bank Locker : வாடிக்கையாளர்களின் பொருட்கள் தொலைந்தால் வங்கிக்கு 100 மடங்கு அபராதம்!

Bank Locker : வாடிக்கையாளர்களின் பொருட்கள் தொலைந்தால் வங்கிக்கு 100 மடங்கு அபராதம்!

பேங்க் லாக்கர்

பேங்க் லாக்கர்

Bank Locker update: வங்கி லாக்கரின் வாடகையாக எவ்வளவு தொகை பெறப்பட்டதோ, அதன் 100 மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

    விலை மதிப்புமிக்க பொருட்கள், நகைகள் மற்றும் ஆவணங்களை வங்கி லாக்கர்களில் வைக்கும் பழக்கம் மக்களிடையே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. லாக்கர் வைத்திருப்பவர் ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகையாகவும் வங்கிக்கு செலுத்த வேண்டும். பாதுகாப்புக்காக மட்டுமே வங்கி லாக்கர்களில் முக்கியமான பொருட்கள் வைக்கப்படும் நிலையில், அவை வங்கிகளில் இருந்து திருடு போய் விட்டால் அதற்கான இழப்பீட்டை வங்கி வழங்க வேண்டும். எவ்வளவு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல புதிய விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் அமல்படுத்தியுள்ளது.

    ஜனவரி 1, 2022 முதல் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    • லாக்கரின் வாடகை மதிப்பில் 100 மடங்கு அபராதமாக செலுத்த வேண்டும்


    • புதிய விதிகளின் பதில் ஒரு வாடிக்கையாளர் லாக்கரில் வைத்திருக்கும் பொருள் அல்லது ஆவணம் ஏதேனும் தொலைந்து போனால், அதற்கு வங்கி காரணமாக இருக்கும் பட்சத்தில் அல்லது வங்கியின் கவனக்குறைவு காரணமாக இந்த சம்பவம் நிகழும் பட்சத்தில், அதற்கான அபராதத்தை வங்கி செலுத்த வேண்டும். வங்கி லாக்கரின் வாடகையாக எவ்வளவு தொகை பெறப்பட்டதோ, அதன் 100 மடங்கு தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

      இதையும் படிங்க.,. STATE BANK: உயர்த்தப்பட்ட வட்டி.. எஸ்பிஐயில் லோன் எடுத்தவர்கள் ஜாக்கிரதை!

      1. காலியாக இருக்கும் லாக்கர்கள் டிஸ்ப்ளே


      ஒவ்வொரு வங்கியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் லாக்கர்கள் இருக்கும். ஆனால் எத்தனை லாக்கர்கள் பயன்பாட்டில் உள்ளன எத்தனை நாட்கள் காலியாக இருக்கின்றன என்பது பற்றிய பட்டியலை டிஸ்ப்ளே செய்ய வேண்டும்  என்று ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய, லாக்கர் விண்ணப்பம் பெறும் போது, எத்தனையாவது வெயிட்டிங் லிஸ்ட் என்பதை தெரிவிக்க வேண்டும். அதே போல, எத்தனை லாக்கர்கள் பயன்பாட்டில் இல்லாமல் காலியாக இருக்கின்றன என்பதையும் வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

      1. மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் அலர்ட்


      தற்போது அனைத்து வகையான நிதி மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துவதற்கு ஓடிபி வழியாக உறுதி செய்வது மட்டுமல்லாமல், SMS மற்றும் மின்னஞ்சல் வழி அறிவிப்பும், ஒவ்வொரு வங்கியால் வழங்கப்படுகிறது. அதே போல பேங்க் லாக்கரை ஒரு யூசர் பயன்படுத்துகிறார் என்ற தகவலையும் மின்னஞ்சல் மற்றும் எஸ்எம்எஸ் வழியாக தெரிவிக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது. மோசடிகளை தவிர்ப்பதற்காகவே, இதை நடைமுறைப்படுத்தியதாகவும் ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.

      இதையும் படிங்க.. UIDAI : வெறும் 12 இலக்க நம்பர் மட்டும் தான் இருக்கும்! ஆதார் கார்டின் சூப்பரான அப்டேட்!

      1. கட்டாய சிசிடிவி கேமராக்கள் மற்றும் வீடியோ பதிவுகள்


      வங்கி லாக்கர் சேவையை வழங்கும் அனைத்து வங்கிகளும் உரிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வீடியோக்கள் பதிவை குறைந்தது 180 நாட்கள் வரை சேமித்து வைக்க வேண்டும். வாடிக்கையாளர் தன்னுடைய லாக்கர் தன்னுடைய தனக்கு தெரியாமல் ஆக்சஸ் செய்யப்பட்டது அல்லது லாக்கரில் இருக்கும் பொருட்கள் திருடப்பட்டது அல்லது வேறு ஏதேனும் லாக்கர் சம்பந்தமான புகார்களைத் தெரிவித்தால் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை செய்வதற்கு எளிமையாக இருக்கும் என்று ஆர்பிஐ அறிக்கை விளக்கியுள்ளது.

      1. 3 ஆண்டுகளுக்கான வாடகை மட்டுமே வங்கி வசூலிக்க முடியும்


      வங்கி வாடகையை பொறுத்தவரை ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கால அளவுகளின் அடிப்படையில் வாடகையை வசூலித்து வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டுக்கான வாடகை, இரண்டு ஆண்டுகளுக்கான வாடகை, ஐந்து ஆண்டுகளுக்கான வாடகை என்று மொத்தமாக வசூலிக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால் தற்போது ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வங்கி லாக்கருக்கான வாடகை, மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று கூறி இருக்கிறது. உதாரணமாக ஓராண்டு வங்கி லாக்கருக்கான வாடகை ரூ. 5000 என்றால் மூன்று ஆண்டுகளுக்கான வாடகையான ரூ.15,000 மட்டுமே அதிகபட்சத் தொகையாக வாடிக்கையாளரிடம் இருந்து வசூலிக்க முடியும்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank Locker, RBI

    அடுத்த செய்தி