முகப்பு /செய்தி /வணிகம் / லாக்கர் ஒப்பந்தங்களை வங்கிகள் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது ரிசர்வ் வங்கி..!

லாக்கர் ஒப்பந்தங்களை வங்கிகள் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை நீட்டித்தது ரிசர்வ் வங்கி..!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் புதுப்பிக்காத காரணத்தால் முடக்கி வைக்கப்பட்ட லாக்கர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்கிகள் வழங்கியுள்ள பாதுகாப்பு பெட்டக (லாக்கர்) டெபாசிட் ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரையில் நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலக்கெடுவானது படிப்படியாக டிசம்பர் வரையிலும் நீட்டிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதாவது , 2023ஆம் ஆண்டு ஜூன் வரையிலும் 50 சதவீத இலக்கு, 2023 செப்டம்பர் 30 வரையில் 75 சதவீத இலக்கு என்ற அடிப்படையில் காலக்கெடு வழங்கப்படுகிறது.

ஒப்பந்தங்களை புதுப்பிப்பதற்கான பத்திரங்கள், எலெக்ட்ரானிக் ஆவணம் மற்றும் இதர ஆவணங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த சிறப்பு நடவடிக்கையை செயல்படுத்துவதற்கான மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, லாக்கர்களுக்கான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் நடவடிக்கையை 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் வங்கிகள் நிறைவு செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவுறுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களிடம் இருந்து தொடர்ச்சியாக பெறப்பட்ட புகார்களுக்கு ஏற்படுத்தப்பட்ட தீர்வுகள், வங்கிச் சேவை மற்றும் அது சார்ந்த தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி வலியுறுத்தியிருந்தது.

புதுப்பிக்காத வாடிக்கையாளர்கள் : 2023ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் காலக்கெடு வழங்கியிருந்த போதிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களின் லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்கவில்லை என்ற விவரம் தெரியவந்தது. அதே சமயம், வாடிக்கையாளர்கள் பலருக்கு இறுதி காலக்கெடுவுக்குள் லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்ற தகவலை வங்கிகள் முறைப்படி தெரிவிக்கவில்லை என்ற விவரமும் தெரியவந்தது. இதையடுத்து, ஒப்பந்த புதுப்பித்தல் நடவடிக்கையை படிப்படியாக நிறைவேற்றும்படி வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Read More : வருமான வரியே வசூலிக்காத நாடுகள்..பொருளாதார வளர்ச்சிக்கு வேறு என்ன வழி?

வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் : லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் சார்பில் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து 50 சதவீத நடவடிக்கைகளை ஜூன் மாதத்திற்குள்ளாகவும், 75 சதவீத நடவடிக்கைகளை செப்டம்பர் மாதத்திற்கு உள்ளாகவும் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்குள் புதுப்பிக்காத காரணத்தால் முடக்கி வைக்கப்பட்ட லாக்கர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பித்த பின்னர் வாடிக்கையாளர்களுக்கு அதுதொடர்பான ஆவணத்தை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட விதிமுறைகளை உள்ளடக்கியவாறு இருக்கும் வகையில் ஒப்பந்த வரைவு ஆவணத்தை மேம்படுத்துமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

First published:

Tags: Bank Loan, Bank Locker, Reserve Bank of India