• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • திடீர் திருமணம்... அவசரமாக மேரேஜ் லோன் பெறுவது எப்படி? தெரிஞ்சுக்கோங்க!

திடீர் திருமணம்... அவசரமாக மேரேஜ் லோன் பெறுவது எப்படி? தெரிஞ்சுக்கோங்க!

மேரேஜ் லோன்

மேரேஜ் லோன்

நீங்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடன்களுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • Share this:
    மேரேஜ் லோன்களில் விருப்பம் அதிகரித்துள்ளது. ஒருவேளை மேரேஜ் லோன் எடுக்க நினைப்பவர்களும் அதுக்குறித்து முழுமையாக தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

    அனைவருக்கும் தனிநபர் கடனுக்கான வட்டிவிகிதம் ஒரே மாதிரியாக இருக்காது. ஏனெனில் அவர்களின் வருமானம், கிரெடிட் ஸ்கோர் உள்ளிட்டவைகளைப் பொறுத்தே வட்டி விகிதம் தீர்மானிக்கப்படும் என்பதால், பர்சனல் லோன் எடுக்கும் முன் சில அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.பெர்சனல் லோனில் திருமண கடன்கள் இன்றைய சூழலில் அதிகமாகியுள்ளன. அவசர திருமணங்கள் அதிகரிப்பால் மணமக்கள் மேரேஜ் லோன்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

    இந்த மெரேஜ் லோன்கள் வங்கிகளில் செய்லபாட்டுகளில் இருந்தாலும் மணமக்கள் சில ஆன்லைன் ஆப் மூலம் கடன், ஃபினாஸ் போன்றவற்றை அதிகம் நாடுகின்றனர். அதற்கு காரணம், அப்ளை செய்த 2 அல்லது 3 நாட்களில் பணம் கிடைக்கிறது. ஆனால் இதுப்போன்ற தனியார் ஆப்களில் கடன் எடுப்பதில் நிறைய ஆபத்துக்களும் இருக்கின்றன கவனம் தேவை.

    நீங்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் கடன்களுக்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும். ஒருவேளை நீங்கள் அவ்வாறு முயற்சி செய்வது கடன் கொடுப்பவர்களுக்கு தெரிந்தால், அவர்கள் முன்னெச்சரிக்கையுடன் உங்களை அணுகுவார்கள். மேலும், தனிநபர் கடன்கள் கொடுக்க முன் வருபவர்கள் கடன்களுக்கு விண்ணப்பிக்கும்போதெல்லாம் ஆவணங்களைக் கடந்து, உங்களை பற்றி விசாரணையையும் மேற்கொள்வார்கள். கடன் வழங்குபவரை நீங்கள் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வருமானம், வட்டி விகிதம், மாதாந்திர ஈ.எம்.ஐக்களுக்கு உகந்த வாய்ப்புகளை கொண்டிருக்கும் கடன் வழங்குவபரை தேர்ந்தெடுத்து கடனுக்கு விண்ணப்பியுங்கள். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதிமுறைகளை பின்பற்றுவார்கள்.

    தகுதி மற்றும் விபரங்கள்:

    எம்என்சி அல்லது அரசு, தனியார் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். சிபில் ஸ்கோர் மிகவும் முக்கியம். பொதுவாக திருமண லோன்கள் அதிக முக்கியத்துவம் பெறும் என்பதால், சிபில் ஸ்கோர் அதிக கவனத்திற்கு உள்ளாகும்.

    உங்கள் சிபில் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால் உங்களால் விருப்பப்பட்ட லோன்களை எடுக்க முடியும். உங்களின் ஆதாரங்களை நிரூபிக்கும் ஆவணங்களை மிக சரியாக இருக்க வேண்டும்.

    கடைசி இரண்டு மாத சம்பள ஸ்லிப், கடைசி மூன்று மாத சம்பள கணக்கு ஸ்டேட்மென்ட் ,KYC ஆவணங்கள் • நிறுவன ஐடி கார்ட் தேவை.

    credit card பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு... இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்!

    ஒருமுறை உங்களது ஆவணங்கள் எல்லாம் சரியாக இருந்து, உங்களுக்கு சரியான தகுதிகளும் வரம்புகளும் இருந்தால் உங்கள் லோன் ஏற்கப்படும்.உங்கள் லோனை 60 மாதத்தில் திரும்ப செலுத்தலாம்,அதேபோல் interest-only instalments முறை மூலம் நீங்கள் உங்கள் மாத லோன் செலவில் 45% வர கட்டுப்படுத்த முடியும். கூடுதல் விவரங்களுக்கு ஆன்லைனில் சென்று marriage loan details என்று தேடினால் அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: