Home /News /business /

பாதியில் விட்ட படிப்பை தொடர லோன் வேண்டுமா? வட்டி எங்க கம்மின்னு தெரிஞ்சிக்கோங்க!

பாதியில் விட்ட படிப்பை தொடர லோன் வேண்டுமா? வட்டி எங்க கம்மின்னு தெரிஞ்சிக்கோங்க!

 லோன்

லோன்

7 ஆண்டுகள் திருப்பி செலுத்தக்கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு, 7.15 சதவிகித வட்டி வழங்குகிறது.

    படிப்பை மேற்கொள்ள அல்லது பாதியில் விட்ட படிப்பை தொடர கல்வி கடன் வேண்டுமா? இதோ முழு விபரங்கள். 

    பல வங்கிகள் கல்விக்கடன்கள் அளித்து வரும் நிலையில், ஒரு சில வங்கிகளில் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ளது. தற்போது, கல்விக்கடன் வழங்குவதற்கு கூடுதலான எச்சரிக்கை நடவடிக்கைகளை வங்கிகள் எடுத்து வரும் நிலையில், இந்த கல்வி ஆண்டில், உயர்கல்விக்கு கடன்களை வழங்குவது குறித்த மதிப்பீடுகளை பல நிலைகளில் செய்து வருகிறது. அதே நேரத்தில், கல்விக்கடன் மிகவும் மலிவானதாகவும், கல்விக்கடனின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டும் உள்ளது. அதைப்பற்றிய முழு விவரங்கள் இங்கே.

    Bankbazaar.com வழங்கிய சமீபத்திய தரவின் படி, தற்போதைய கடன் வட்டி 6.75 சதவிகிதம் முதல் 7.15 சதவிகிதம் வரை என்ற அளவிலேயே உள்ளது.

    6.75 % வட்டி விகிதம் :

    மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கல்விக்கடன் வழங்கும் வங்கியில் முதல் இடத்தில் இருப்பது மாநில வங்கியான பாங்க ஆஃப் பரோடா. 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்தக்கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக்கடனுக்கு, குறைந்த வட்டி விகிதமாக 6.75 சதவிகிதம் மட்டுமே நிர்ணயித்துள்ளது. மாதத் தவணை தோராயமாக ரூ. 29,942 என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

    6.8% வட்டி விகிதம் :

    குறைவான வட்டி விகிதத்தில் வங்கிக்கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலில் அடுத்து இருப்பது, மற்றொரு பொதுத்துறை வங்கியான யூனியன் வங்கி. இந்த வங்கி வழங்கும் கல்விக்கடனின் வட்டி விகிதம் 6.8 சதவிகிதம். இந்த கடனுக்கான மாதத் தவணை ரூ. 29,999 என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

    6.85 % வட்டி விகிதம் :

    0.05 சதவிகிதம் என்ற வித்தியாசத்தில், மூன்று வங்கிகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. வட்டி விகிதம் 6.85 சதவிகிதம் என்ற அளவில் குறைவாக இருந்தாலும், நாட்டின் மற்ற பெரிய வங்கிகளான BOB மற்றும் யூனியன் வங்கியின் வட்டியை விட கொஞ்சம் அதிக வட்டியில் கல்விக்கடனை பின்வரும் வங்கிகள் வழங்குகின்றன. பேங்க் ஆஃப் இந்தியா, மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளும் ஒரே வட்டி விகிதத்தில் கல்விக்கடங்களை வழங்குகின்றன. மாதத்தவணை தோராயமாக  30,039 என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

    6.9% வட்டி விகிதம் :

    மிகவும் மலிவான கல்விக்கடன் வழங்கும் வங்கிகளில், அடுத்த இடங்தில் இருப்பது அரசு வங்கிகளான, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி மற்றும் ஐ.டி.பி.ஐ ஆகும். இந்த மூன்று வங்கிகளும், 7 ஆண்டுகள் திருப்பி செலுத்தக்கூடிய 20 லட்ச ரூபாய் கடனுக்கு, 6.9 சதவிகித வட்டி வழங்குகிறது.

    7.05% வட்டி விகிதம்

    பட்டியலில் அடுத்து இருக்கும் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா. வட்டி விகிதம் 7.05 சதவிகிதம் மற்றும் மாதத்தவணை ரூ. 30,234 என்று கணக்கிடப்பட்டுள்ளது.

    ரிஸ்க் என்ற பேச்சுக்கே இடமில்லை... 5 லட்சம் பெற மிகச் சிறந்த வழி இதுவே!

    இதைத்தவிர்த்து, மாநில வங்கியான இந்தியன் வங்கி, 7 ஆண்டுகள் திருப்பி செலுத்தக்கூடிய 20 லட்ச ரூபாய் கல்விக் கடனுக்கு, 7.15 சதவிகித வட்டி வழங்குகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank Loan

    அடுத்த செய்தி