பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி விகிதத்தை 50 அடிப்படை பாயிண்ட் அடிப்படையில் உயர்த்துவதற்கான ஒப்புதல், அண்மையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதி கொள்கை குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக ஐசிஐசிஐ வங்கி, ஃபேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகிய வங்கிகளில் கடன் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரெப்போ வட்டி விகிதத்தின்படி, வங்கிகளில் மேற்கொள்ளப்படும் டெபாசிட் மற்றும் வழங்கப்படும் கடன் ஆகிய இரண்டுக்குமான வட்டி உயர்த்தப்பட்டு வருகிறது. ஃபேங்க் ஆஃப் பரோடா வங்கியில் சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதம் 7.95 சதவீதம் ஆகும். இதேபோன்று ஐசிஐசிஐ வங்கியில் தலா ஓராண்டு, ஒரு மாதத்திற்கான வட்டி விகிதம் 9.10 சதவீதமாக உயர்கிறது. இந்த உயர்வு ஆகஸ்ட் 5ஆம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேல் படிப்புக்காக வங்கிகளில் லோன் எடுக்க போறீங்களா? இந்த தகவல் உங்களுக்கு தான்!
கனரா வங்கியில் கடன்களுக்கான வட்டி விகிதம் 50 அடிப்படை பாயிண்ட் அளவில் அதிகரிக்கப்பட்டு தற்போது 8.30 சதவீதமாக இருக்கிறது. இது ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஓராண்டு கால தவணையுடன் கூடிய கடன்களுக்கு 7.40 சதவீத வட்டியும், 3 ஆண்டுகளுக்கு உள்ளான தவணையுடன் கூடிய கடன்களுக்கு 7.80 சதவீத வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கடனுக்கு 8 முதல் 8.40 சதவீத வட்டியும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகளுக்கு உள்ளான தவணையுடன் கூடிய கடனுக்கு 8.40 சதவீதம் முதல் 8.80 சதவீதம் வரையிலான வட்டியும் விதிக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு தொடங்க நினைப்பவர்கள் நோட் செய்ய வேண்டிய விஷயங்கள்!
முன்னதாக ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் ஆய்வுக் கூட்டம் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ரெப்போ ரேட் வட்டி விகிதத்தை 50 அடிப்படை பாயிண்ட் என்ற வகையில் அதிகரித்து 5.4 சதவீதமாக நிர்ணயம் செய்தது. அண்மைக் காலங்களில் ரெப்போ ரேட் உயர்த்தப்படுவது இது 3வது முறையாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் ரெபோ ரேட் விகிதம் 5.15 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 5.4 சதவீதமாக இருக்கிறது.
முன்னதாக, ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழுவின் அரையாண்டு ஆய்வுக் கூட்டம் கடந்த மே மாதத்தில் நடைபெற்றபோது ரெப்போ ரேட் விகிதம் 40 பாயிண்ட் அடிப்படையிலும், அதனைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் நடைபெற்றக் கூட்டத்தில் 50 பாயிண்ட் அடிப்படையிலும் அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில், ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் 3ஆம் முறையாக ரெப்போ ரேட் விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank Loan, Canara Bank, ICICI Bank