எந்தெந்த வங்கியில் கம்மியான வட்டிக்கு லோன் கிடைக்கிறது. அது எந்த மாதிரியான லோன் போன்ற தகவலை தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கிகளில் லோன் பெறுவது சுலபம் என்றாலும் வட்டி மற்ற விவரங்கள் எதுவும் அறியாமல் உடனே லோன் அப்ளை செய்யாதீர்கள். ஆரம்பத்தில் வட்டி குறைவாக குறிப்பிடப்பட்டாலும் அந்த ஃபீஸ் இந்த ஃபீஸ் என்று படிப்படியாக சேர்த்து கடைசியில் நீங்கள் எதிர்பார்த்தை விட அதிக வட்டி வந்து நிற்கும். இதை தவிர்க்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது எந்த வங்கியில் குறைவான வட்டியில் லோன் கிடைக்கும் என்ற விவரங்களை தெரிந்து கொள்வது. அதன்படி இந்த பதிவில் வாகன கடன்களுக்கு எந்த வங்கிகள் குறைவான வட்டி தருகிறது என தெரிந்து கொள்ளுங்கள். கண்டிபாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நீங்கள் இரு சக்கர வாகனம் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? பல முன்னணி வங்கிகள் பைக் லோன் வழங்க தயாராக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த கொரோனா காலக்கட்டத்தில் வங்கிகளில் பைக் லோன் வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. முதலில் வாகன கடனுக்கு அப்ளை செய்த உடன், குறைந்தது 3 அல்லது 4 வங்கிகளில் கூறப்படும் வட்டியை ஒப்பிட்டு பார்ப்பது அவசியம். அதன் பிறகு செயல்பாட்டு ஃபீஸ், ஆவணங்களுக்கான கட்டணம் இவை ஏதும் உள்ளதா? எனவும் விசாரிக்க வேண்டும். முடிந்தவரை வாகன கடன் எடுக்கும் போது குறைவான வட்டியில் வழங்கும் வங்கியை அணுகுவது நல்லது.
தினமும் ரூ. 200 சேமிப்பு உங்களை லட்சாதிபதி ஆக்க போகிறது தெரியுமா?
சென்ட்ரல் பேங்க் - 7.25% , கனரா வங்கி - 9%, ஆக்சிஸ் வங்கி - 9%, ஐசிஐசிஐ வங்கி - 9.50%, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - 10.05% , எஸ்பிஐ - 10.25% , எச்டிஎஃப்சி வங்கி - 12%, யெஸ் வங்கி - 12% இந்த வங்கிகள் கரண்ட் சூழ்நிலையில் குறைவான வட்டியில் வாகன கடனை வழங்குகின்றன. தேவைப்படுபவர்கள் உடனே வங்கியை அணுகி லோன் பெறுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, News On Instagram