Home /News /business /

இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே

இப்படி ஒரு விஷயத்துக்காக பேங்கில் லோன் கிடைக்குமா! இத்தனை நாள் தெரியாம போச்சே

பேங்க் லோன்

பேங்க் லோன்

ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு ரூ 10,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும்.

    சொந்த வீடு வாங்குவது அல்லது விரும்பியது போல வீடு கட்டுவது என்பது பலரின் கனவு. பெரும்பாலான மக்கள் வீட்டுக் கடன் மூலம் வீடு வாங்குகிறார்கள். பல வங்கிகளும் வீட்டுக் கடன் வசதியை வழங்கி வருகின்றன. உங்களின் வருமானம், வீட்டின் மதிப்பு, கிரெடிட் ஸ்கோர், உள்ளிட்டவற்றின் அடிப்படையில் உங்களுக்கான கடன் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் வீடு வாங்குவதற்கு அல்லது வீடு கட்டுவதற்கு மட்டுமல்லாமல் வீட்டை புதுப்பிப்பதற்கு அல்லது வீட்டின் மாடலை மாற்றுவதற்கும் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு பெயர் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோன்.

    ஏற்கனவே நீங்கள் வீட்டுக் கடனில் வாங்கிய வீட்டையும் புதுப்பிப்பதற்கு அல்லது புதிய தளங்கள், அறைகள் சேர்ப்பதற்கு இந்த கூடுதல் கடனை பெறலாம். இது டாப்-அப் லோன் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உங்களிடம் இருக்கும் வீட்டையும் நீங்கள் புதுப்பிப்பதற்கு ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனை பெறலாம்.

    FIXED DEPOSIT : அந்த டாப் வங்கிகள் தரும் வட்டி பற்றி தெரிஞ்சிக்க வேண்டாமா?

    வீட்டு கடன் வாங்கும் பொழுது நீங்கள் என்ன விஷயத்தையெல்லாம் கவனமாக தேர்வு செய்தீர்களோ, வீட்டு மேம்பாட்டு கடன் வாங்கும் போதும் கவனம் செலுத்தவேண்டும். மெட்ரோ சிட்டி என்று கூறப்படும் பெருநகரங்களில் நீங்கள் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கு விண்ணப்பிக்கும் பொழுது உங்களுக்கு ரூ 10,00,000 வரையிலும் கடன் வழங்கப்படும். அதைத் தவிர டயர் டூ, டயர் த்ரீ நகரங்களில் வசிப்பவர்கள் ஹோம் இம்ப்ரூவ்மென்ட் லோனுக்கு அப்ளை செய்யும் போது ₹6,00,000 கடன் வரையிலும் வழங்கப்படுகிறது.

    ஹோம் இம்ப்ரூவ்மென்ட் கடனுக்கான விதிமுறைகள்

    மற்ற கடன்களை வாங்கும் போது காணப்படும் பெரும்பாலான விதிமுறைகள் இந்தக் கடனுக்கும் பொருந்தும். சம்பளம் வாங்குபவர்கள், வணிகம் செய்பவர்கள் சுயதொழில் செய்பவர்கள் என்று அனைவருமே இந்த கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

    வட்டி மாறவில்லை.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்!

    கடனுக்கான வட்டி 6.55% முதல் 10.99% வரை விதிக்கப்படுகிறது.

    இந்த கடன் வாங்குபவர்களுக்கான தகுதி விண்ணப்பதாரரின் வயது 21 – 60 வயது வரை இருக்கலாம். சுய தொழில் செய்பவராக இருந்தால் 65 வயது வரை அனுமதி உள்ளது.

    வீட்டுக் கடன் திருப்பி செலுத்து காலம் அதிகபட்சமாக 30 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படுகிறது

    வீட்டை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என்பதற்கான கொட்டேஷன் வழங்க வேண்டும்.

    உங்கள் வருமானச் சான்றிதழ், வருமான வரி தாக்கல் செய்த அறிக்கை, வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    வருமான வரி சட்டம், பிரிவு 24b இன் படி, வீட்டு மேம்பாட்டுக் கடனுக்காக நீங்கள் செலுத்தும் வட்டியில் ஆண்டுக்கு ₹30,000 வரை நீங்கள் வருமான வரியில் விலக்காக பெறலாம்.

    உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கும் அதிகமான இருப்பது சிறந்தது. அதிக கிரெடிட் ஸ்கோர் உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் வலுவாக இருப்பதை குறிக்கிறது. அப்படியானால் குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, Home Loan, Savings

    அடுத்த செய்தி