Home /News /business /

கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.. 1 லட்சத்திற்கு இவ்வளவு தான் ஈஎம்ஐ!

கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.. 1 லட்சத்திற்கு இவ்வளவு தான் ஈஎம்ஐ!

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

5ஆண்டுகள் வரை தவணைக் காலம் கிடைக்கும். ரூ.2,149 என்ற ஈஎம்ஐ அடிப்படையில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது

    பணப் பற்றாக்குறை ஏற்படும்போது பெர்சனல் லோன் (தனிநபர் கடன்) பெறுவது குறித்து நாம் பரிசீலனை செய்கிறோம். ஏதேனும் ஒரு பொருள் வாங்குவது அல்லது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது அல்லது விழாக்கால செலவுகளை எதிர்கொள்வது போன்ற பல்வேறு தேவைகளுக்கு தனிநபர் கடன் தான் முதன்மையான தேர்வாக இருக்கிறது.

    கடந்த 2019 நிதியாண்டில் ரூ.75,088 கோடி அளவில் இருந்த தனிநபர் கடன் வழங்கல் அளவு என்பது இரண்டு மடங்கு அதிகரித்து தற்போது 2022 நிதியாண்டில் 1,47,236 கோடியாக அதிகரித்துள்ளது. தனிநபர் கடன் பெற்ற அக்கவுண்ட்களின் எண்ணிக்கையைப் பொருத்தவரையில் கடந்த 2019 நிதியாண்டில் 39.9 லட்சமாக இருந்தது. அந்த எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்து 2022 நிதியாண்டில் 158.1 லட்சம் அக்கவுண்ட்களாக அதிகரித்துள்ளது.

    இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!

    டிஜிட்டல் முறையில் விண்ணப்பம் :

    முன்பெல்லாம் தனிநபர் கடன் பெறுவதற்கு நாம் வங்கியை தேடி செல்லும் நிலை அல்லது வங்கியின் பிரதிநிதி ஒருவர் நம்மை நேரில் பார்த்து விசாரணை செய்து விண்ணப்பத்தை பரிசீலனை செய்யும் முறை இருந்து வந்தது. தற்போது தனிநபர் கடனுக்கு விண்ணப்பம் செய்வது மற்றும் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வது போன்ற நடைமுறைகள் டிஜிட்டல் முறையில் நடைபெறுகின்றன.

    குறைந்த வட்டியில் கடன் :

    தனிநபர் கடன் வழங்கும் முதன்மையான நிறுவனங்கள் குறித்து இந்தச் செய்தியில் பட்டியலிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் தொகைக்கான ஈஎம்ஐ எவ்வளவு, கடன் தொகைக்கான வருடாந்திர வட்டி எவ்வளவு, அதிகபட்ச கடன் எவ்வளவு வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.

    பெண்களுக்காக அரசு வழங்கும் கடனுதவிகள்.. எப்படி பெறுவது? முழு விபரம்!

    ஹெச்டிஎஃப்சி வங்கி :

    இந்த வங்கியில் வட்டி என்பது 10.25 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஒரு லட்சத்திற்கான ஈஎம்ஐ தொகை ரூ.2,137 ஆகும். வாடிக்கையாளர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.40 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை ஆகும். கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணமாக 2.5 சதவீத தொகை வரையில் வசூல் செய்யப்படுகிறது.

    டாடா கேபிடல் :

    இங்கு வட்டி விகிதம் 10.99 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஒரு லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் ஈஎம்ஐ தொகையாக ரூ.2,174 வசூல் செய்யப்படும். பிராசசிங் கட்டணமாக 2.75 சதவீதம் வரையில் வசூல் செய்யப்படுகிறது. தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.35 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

    ஐசிஐசிஐ வங்கி :

    தனிநபர் கடனுக்கு 10.25 சதவீதம் முதல் வட்டி வசூல் செய்யப்படுகிறது. 6 ஆண்டுகள் வரை தவணைக் காலம் கிடைக்கும். ரூ.2,137 என்ற ஈஎம்ஐ அடிப்படையில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையில் தனிநபர் கடன் பெற்றுக் கொள்ளலாம். தனிநபர் கடனுக்கான பிராசசிங் கட்டணம் 2.50 சதவீதம் வரை ஆகும்.

    ஆக்சிஸ் வங்கி :

    தனிநபர் கடன் என்பது 10.25 சதவீத வட்டி முதல் தொடங்குகிறது. ஒரு லட்சத்திற்கு ஈஎம்ஐ கட்டணமாக ரூ.2,137 செலுத்த வேண்டும். புராசசிங் கட்டணம் 1.5 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை ஆகும். அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரையில் கடன் பெறலாம். தவணைக் காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    கோடக் மஹிந்திரா வங்கி :

    இந்த வங்கியில் வட்டி என்பது 10.25 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஒரு லட்சத்திற்கான ஈஎம்ஐ தொகை ரூ.2,137 ஆகும். வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையில் தனிநபர் கடன் வழங்கப்படுகிறது. தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை ஆகும். கடன் பெறுவதற்கான பிராசசிங் கட்டணமாக 2.5 சதவீத தொகை வரையில் வசூல் செய்யப்படுகிறது.

    பஜாஜ் பின்சர்வ் :

    இங்கு வட்டி விகிதம் 13 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஒரு லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் ஈஎம்ஐ தொகையாக ரூ.2,275 வசூல் செய்யப்படும். பிராசசிங் கட்டணமாக 4 சதவீதம் வரையில் வசூல் செய்யப்படுகிறது. தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.

    ஐடிஎஃப்சி பர்ஸ்ட் பேங்க் :

    தனிநபர் கடனுக்கு 10.49 சதவீதம் முதல் வட்டி வசூல் செய்யப்படுகிறது. 5ஆண்டுகள் வரை தவணைக் காலம் கிடைக்கும். ரூ.2,149 என்ற ஈஎம்ஐ அடிப்படையில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இந்த வங்கியில் அதிகபட்சமாக ரூ.40 லட்சம் வரையில் தனிநபர் கடன் பெற்றுக் கொள்ளலாம். தனிநபர் கடனுக்கான பிராசசிங் கட்டணம் 3.50 சதவீதம் வரை ஆகும்.

    எஸ்பிஐ வங்கி :

    தனிநபர் கடன் வட்டி விகிதம் 9.60 சதவீதம் முதல் 13.85 சதவீதம் ஆகும். ஒரு லட்சத்திற்கு ரூ.1,105 முதல் ரூ.2,319 வரை ஈஎம்ஐ வழங்கப்படுகிறது. புராசசிங் கட்டணம் 1.5 சதவீதம் மட்டுமே. தனிநபருக்கு ரூ.20 லட்சம் வரையில் கடன் கிடைக்கும். தவணைக் காலம் 6 ஆண்டுகள் வரை ஆகும்.

    இண்டஸ்லேண்ட் வங்கி :

    இங்கு வட்டி விகிதம் 10.49 சதவீதம் முதல் தொடங்குகிறது. ஒரு லட்சம் கடன் பெற்றீர்கள் என்றால் ஈஎம்ஐ தொகையாக ரூ.2,149 வசூல் செய்யப்படும். பிராசசிங் கட்டணமாக 3 சதவீதம் வரையில் வசூல் செய்யப்படுகிறது. தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரையில் கடன் பெற்றுக் கொள்ளலாம். தவணைக் காலம் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank Loan, HDFC, ICICI Bank, Personal Loan

    அடுத்த செய்தி