ஆங்கிலக் காலண்டரின் படி, ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதம் கொஞ்சம் பரபரப்பான மாதமாகத்தான் இருக்கும். பள்ளிகளில் தேர்வு, பண்டிகைகள், மூன்றாம் காலாண்டின் இறுதி என்று காணப்படும். வங்கி விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் பொது விடுமுறை என்பதைக் கடந்து, மாநில வாரியாக வேறுபடும். அதன் அடிப்படையில், செப்டம்பர் 2022, வங்கிக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டுக்கும், மாத வாரியாக ரிசர்வ் வங்கி மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் பிரித்து, பட்டியல் வெளியிடும். அவை,
அதன்படி, 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு வங்கி விடுமுறை என்பது வார இறுதி நாட்கள் மற்றும் பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 – வங்கி பொது விடுமுறை மற்றும் மாநில விடுமுறை
வங்கி விடுமுறைகளில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எல்லா பண்டிகைகளும், எல்லா மாநிலங்களிலும் பெரிய அளவில் கொண்டாடப்படாது அல்லது அப்படி ஒரு பண்டிகை இருப்பதாகவே தெரியாது. உதாரணமாக, ஆடிப்பெருக்கு விசேஷ தினத்தைக் கூறலாம். தமிழகத்தின் மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றான ஆடிப்பெருக்கு. ஓணம் கேரளாவின் முக்கியமான பண்டிகைகள் ஒன்றாகும். மற்ற மாநிலங்களில் கொண்டாடப்படும் நாராயண குரு சமாதி தினம் உள்ளிட்ட பண்டிகைகளை விமரிசையாகக் கொண்டாடும் மாநிலங்களுக்கு மட்டுமே வங்கி விடுமுறை அறிவிக்கப்படும்.
செப்டம்பர் 2022 வங்கி விடுமுறை தினங்கள் குறைவா?
செப்டம்பர் மாதத்தில் எப்போதுமே பல பண்டிகைகள் வரும். ஆனால், இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக, பெரும்பாலான விசேஷங்கள் ஆகஸ்ட் மாதத்திலேயே கொண்டாடப்பட்டுவிட்டன. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி என்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளும் ஆகஸ்ட் 2022-லேயே முடிந்துவிட்டன. எனவே, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கத்தை விட குறைவான நாட்களே வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
Also Read : எல்ஐசி-யில் தினசரி ரூ.29 முதலீடு செய்து ரூ.4 லட்சம் பெறுங்கள் - விவரங்கள் இதோ!
செப்டம்பர் 2022 வங்கிகளுக்கு மாநில வாரியான விடுமுறை தினங்கள்
வழக்கமாக வார இறுதி நாட்கள் விடுமுறைகள் தவிர்த்து, மொத்தம் 8 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றிய பட்டியல் இங்கே.
செப்டம்பர் 1: நாடு முழுவதும் பிரம்மண்டாமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 31 ஆம் தேதியே நிறைவடைகிறது. செப்டம்பர் 1 ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியின் 2 ஆம் நாள் கொண்டாட்டமாக, பனாஜியில் உள்ளூர் வங்கி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 6: கர்மா பூஜை என்பது இந்தியாவின் கிழக்குப் பகுதியில் இருக்கும் சில மாநிலங்களில் கொண்டாடப்படும் விவசாயத் திருவிழாவாகும். பீகார், ஜார்கண்டில் மாநில விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 7: ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கும் ஓணம் பண்டிகையில், ஓணம் முதல் நாள் என்று திருவோணப் பண்டிகைக்கு முந்தைய நாள் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியில் விடுமுறை அளிக்கப்படும்.
செப்டம்பர் 8: திருவோணப் பண்டிகை என்பது கேரளா அரசின் மாநில விடுமுறை தினமாகும்.
செப்டம்பர் 9: கேங்டாக் பகுதியில் 'இந்திர யாத்திரை' பண்டிகை வருவதால் அப்பகுதியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
செப்டம்பர் 10: ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு, கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி, திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
செப்டம்பர் 26: ஜெய்ப்பூர் மற்றும் இம்பாலில் நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டு வங்கிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும்.
Also Read : உங்கள் குழந்தைகளின் பள்ளி கட்டணத்தைச் செலுத்தச் சிரமப்படுகிறீர்களா? இந்த ஆப்ஷனை ட்ரை பண்ணலாமே!
வார இறுதி வங்கி விடுமுறை நாட்கள்
செப்டம்பர் 4, செப்டம்பர் 11, செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 25 ஆகிய நான்கு ஞாயிற்றுக் கிழமைகளும் விடுமுறை தினங்களாகும்.
செப்டம்பர் 10 இரண்டாம் சனிக்கிழமை மற்றும் செப்டமபர் 24 நான்காம் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை தினங்களாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank holiday, September Month