முகப்பு /செய்தி /வணிகம் / அக்டோபர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

அக்டோபர் மாதத்தில் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை! வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்

வங்கிக்கு செல்லும் முன்பு வங்கி செயல்படும் நாட்கள் மற்றும் நேரங்களை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் மூடப்படுகின்றன. அதற்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் எடுப்பதை திட்டமிட வேண்டும்.

தற்போதைய கொரோனா தொற்றுநோய் காலத்தில் பணம் செலுத்துதல், ஷாப்பிங், பரிவர்த்தனை என அனைத்து விஷயங்களும் டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது. இதன் காரணமாக மக்களின் பெரும்பாலான பணிகள் ஆன்லைனிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல சில வங்கி பணிகள் ஆன்லைனில் மேற்கொள்ளப்பட்டாலும், சில முக்கியமான வேலைகளை முடிக்க வங்கிக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆனால், வங்கிக்கு செல்லும் முன்பு வங்கி செயல்படும் நாட்கள் மற்றும் நேரங்களை பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம்.

வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம். இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் அக்டோபர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் மூடப்படும்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அக்டோபர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :

1. அக்டோபர் 1 - வங்கிக் கணக்குகளின் அரை ஆண்டு நிறைவு

2. அக்டோபர் 2 - மகாத்மா காந்தி ஜெயந்தி (அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

3. அக்டோபர் 3 - ஞாயிறுக்கிழமை

4. அக்டோபர் 6 - மஹாளய அமாவாஸ்யே (அகர்தலா, பெங்களூரு, கொல்கத்தா மாநிலங்களில் விடுமுறை)

5. அக்டோபர் 9 - இரண்டாவது சனிக்கிழமை

6. அக்டோபர் 10 - ஞாயிறுக்கிழமை

7. அக்டோபர் 12 - துர்கா பூஜை (அகர்தலா, கொல்கத்தா)

8. அக்டோபர் 13 - மகா அஷ்டமி (அகர்தலா, புவனேஸ்வர், காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி மாநிலங்களில் விடுமுறை)

9. அக்டோபர் 14 - துர்கா பூஜை/தசரா/ஆயுத பூஜை (அகர்தலா,

பெங்களூரு, தமிழ்நாடு, கேங்டாக், கவுகாத்தி, கான்பூர், கொச்சி,

கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங், ஸ்ரீநகர், திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)

10. அக்டோபர் 15 - விஜய தசமி (இம்பால் மற்றும் சிம்லாவை தவிர அனைத்து மாநிலங்களிலும் விடுமுறை)

11. அக்டோபர் 17 - ஞாயிறுக்கிழமை

12. அக்டோபர் 18 - கதி பிஹு (கவுகாத்தி)

13. அக்டோபர் 19 - நபிகள் நாயகம் பிறந்த நாள் (அகமதாபாத்,

பெலாப்பூர், போபால், தமிழ்நாடு, டேராடூன், ஐதராபாத், இம்பால், ஜம்மு,

கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர்,

ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்)

14. அக்டோபர் 20 - மகரிஷி வால்மீகியின் பிறந்த நாள்/லட்சுமி பூஜை/ஐடி-இ-மிலத் (அகர்தலா, பெங்களூரு, சண்டிகர், கொல்கத்தா, சிம்லா)

15. அக்டோபர் 22 - வெள்ளிக்கிழமை ஈத்-இ-மீலாத்-உல்-நபி (ஜம்மு, ஸ்ரீநகர்)

16. அக்டோபர் 23 - நான்காவது சனிக்கிழமை

17. அக்டோபர் 24 - ஞாயிறுக்கிழமை

18. அக்டோபர் 31 - ஞாயிறுக்கிழமை.

மேற்கண்ட நாட்கள் வங்கிகளுக்கு முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்து கொள்ளுங்கள்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Bank holiday, News On Instagram