முகப்பு /செய்தி /வணிகம் / நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு பேங்க் விடுமுறை...

நவம்பர் மாதத்தில் 10 நாட்களுக்கு பேங்க் விடுமுறை...

வங்கி விடுமுறை நாட்கள்

வங்கி விடுமுறை நாட்கள்

தீபாவளி ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் முடிந்துவிட்ட நிலையில். இந்த மாதம் மொத்தமே 10 நாட்கள் மட்டும் தான் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

 • 1-MIN READ
 • Last Updated :
 • New Delhi, India

செப்டம்பர் மற்றும் அக்டோபர் என்ற கடந்த இரு மாதங்களுமே நிறைய பண்டிகைகள், உள்ளூர் விடுமுறைகள், தேசிய விடுமுறைகள் என்று வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அக்டோபர் மாதம் மட்டுமே தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் மொத்தமாக 21 நாட்கள் வங்கிகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் நவம்பர் 2022 அப்படி இருக்காது.

தீபாவளி ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் முடிந்துவிட்ட நிலையில். இந்த மாதம் மொத்தமே 10 நாட்கள் மட்டும் தான் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையில் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். நவம்பர் மாதம்  எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பதை பற்றிய முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்.

ஃபோன்பே கூட வேண்டாம்.. கையை நீட்டினாலே பணம் டெபிட்.. டிஜிட்டல் எதிர்காலம்!

 ஒவ்வொரு ஆண்டுக்கும், மாத வாரியாக ரிசர்வ் வங்கி மூன்று முக்கிய பிரிவுகளின் கீழ் பிரித்து, பட்டியல் வெளியிடும். அவை,

 • பேச்சுவார்த்தைக்குட்பட்ட கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை
 • நிகழ்நேர மொத்த தீர்வு விடுமுறை
 • வங்கிகள் கணக்குகளை மூடுவது

நவம்பர் 2022: ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள விடுமுறை

பொதுவாகவே பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் அளிக்கும் விடுமுறை என்பது ரிசர்வ் வங்கியின் உத்தரவின்படி தான் இருக்கும். இதைத் தவிர்த்து அந்தந்த மாநிலத்தில் மற்றும் உள்ளூரில் நடைபெறும் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு ஏற்றவாறு அந்த ஊரில் செயல்படும் வங்கிகள் இயங்காது.

அந்த வகையில் நவம்பர் 2022, சனி ஞாயிறு விடுமுறை தவிர்த்து, நவம்பர் 1, 8, 11 மற்றும் நவம்பர் 23, ஆகிய நான்கு நாட்கள் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ளது.

பண்டிகை மற்றும் சிறப்பு தின விடுமுறைகள்

நவம்பர் 1 அன்று கர்நாடகா மாநிலம் உருவான நாள், கர்நாடக தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், கர்நாடக மாநிலத்தில், வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 8 ஆம் தேதி, குரு நானக் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி அன்று சீக்கிய மதத்தின் தலைவரான குரு நானக் தேவின் பிறந்தநாள், முன்னிட்டு, வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 11 அன்று, கனகதாசா ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்த நாளில் கர்நாடக மாநிலத்தில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கவிஞர், இசை கலைஞர் என்ற பன்முகத் திறமை கொண்ட கனகதாசரின் பிறந்த  நாள் அன்று கர்நாடகா மற்றும் மேகலயாவில் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா- கார்த்தி சகோதரர்கள் வெளியிட்ட நித்தம் ஒரு வானம் ட்ரைலர்

அதே போல, நவம்பர் 23 அன்று, மேகாலயாவில் உள்ள காசி என்ற சமூகத்தினரின், காசி புத்தாண்டு கொண்டாட்டம் காரணமாக, வங்கிகளுக்கு விடுமுறை.

வங்கிகள் விடுமுறை தேதிகள்

 • நவம்பர் 6 – ஞாயிற்றுக்கிழமை
 • நவம்பர் 12 – இரண்டாம் சனிக்கிழமை
 • நவம்பர் 13 - ஞாயிற்றுக்கிழமை
 • நவம்பர் 20 - ஞாயிற்றுக்கிழமை
 • நவம்பர் 26 – நான்காம் சனிக்கிழமை
 • நவம்பர் 27 - ஞாயிற்றுக்கிழமை
First published:

Tags: Bank, Trending News