• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • மே மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

மே மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

 ஆர்பிஐ

ஆர்பிஐ

இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் பல்வேறு பண்டிகை நாட்கள் காரணமாக வங்கிகள் மே மாதத்தில் 12 நாட்கள் வரை மூடப்படுகிறது. இதில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் அடங்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். இதனிடையே கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மே மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய கடுமையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைக்கு மத்தியில், பல மாநிலங்களில் வங்கி வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

அனைத்து காரணிகளையும் கருத்தில் கொண்டு, மே 2021 மாதத்திற்கான வங்கி விடுமுறைகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது :

மே 1: மகாராஷ்டிரா தினம் மற்றும் தொழிலாளர் தினம்- இந்நாளில் தமிழகம், கொல்கத்தா, கொச்சி, மும்பை, நாக்பூர், பனாஜி போன்ற வங்கிகள் மூடப்படும்.

மே 2: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

மே 7: ஜுமாத் உல் விடா - ஜும்மு காஷ்மீரில் வங்கிகள் மூடப்படும்.

மே 8: இரண்டாவது சனிக்கிழமை

மே 9: வார விடுமுறை (ஞாயிறு)

மே 13: ரம்ஜான்-ஐடி (ஈத்-உல்-பித்ர்) இன்று நாடு முழுவதும் தேசிய விடுமுறையாக இருக்கும்.

மே 14: பகவன் ஸ்ரீ பர்சுராம் ஜெயந்தி / பசவ ஜெயந்தி / அக்ஷயா திரிதியா - சென்னை மற்றும் கொல்கத்தாவில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

மே 16: வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

மே 22: நான்காவது சனிக்கிழமை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை

மே 23: வார விடுமுறை (ஞாயிறு)

மே 26: புத்த பூர்ணிமா - இன்று பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 30: வார விடுமுறை (ஞாயிற்றுக்கிழமை)

Also read... Reliance | ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் 4வது காலாண்டு வருமானம் இரட்டிப்பு வளர்ச்சி!

வங்கி விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் அனுசரிக்கப்படும் பண்டிகைகளைப் பொறுத்தது என்பதையும், மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடக்கூடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேற்கூறிய விடுமுறை தினங்களில் அந்தந்த மாநிலத்திற்கு ஏற்ப சில தினங்கள் மாறலாம். இந்த விடுமுறை தினங்களை மனதில் வைத்து, வாடிக்கையாளர்கள் தங்கள் வருகையைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நாட்களில் வங்கி கிளைகள் ம்ட்டும் தான் மூடப்பட்டிருக்கும், மொபைல் மற்றும் இணைய வங்கி வழக்கம் போல் செயல்படும். அதனால் வாடிக்கையாளர்கள் எவ்வித தடையுமின்றி ஆன்லைன் முறைகள் மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: