ஹோம் /நியூஸ் /வணிகம் /

மார்ச் 2021 - வங்கி விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரம்

மார்ச் 2021 - வங்கி விடுமுறை நாட்கள் குறித்த முழு விவரம்

கோப்பு படம்

கோப்பு படம்

Bank Holidays in March | இந்திய ரிசர்வ் வங்கி காலண்டரின் படி வங்கிகள் மார்ச் மாதத்தில் 11 நாட்கள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மார்ச் மாதத்தில் வங்கிகள் 11 நாட்கள் மூடப்படும் என கூறப்பட்டுள்ளது. மார்ச் 5, மார்ச் 11, மார்ச் 22, மார்ச் 29 மற்றும் மார்ச் 30 ஆகிய ஐந்து நாட்கள் வங்கிகள் மூடப்படும். இது தவிர, நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வங்கிகள் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம் . பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதனிடையே அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில், தொடந்து இரண்டு நாள் நீண்ட வேலைநிறுத்தம் கடைபிடிக்கப்படும். வங்கி தொழிற்சங்கங்கள் மார்ச் 10 அன்று டெல்லியில் நாடாளுமன்றத்தை நோக்கி அணிவகுக்க திட்டமிட்டுள்ளன.

மத்திய அரசின் தனியார்மயமாக்கல் தொடர்பான புதிய விதிகளை மறுபரிசீலனை செய்யுமாறு நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செய்வி சாய்க்காவிட்டால் நாங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி, நீண்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாத விடுமுறை நாட்கள்:

மார்ச் 4, 2021ஞாயிறு
மார்ச் 5, 2021மிசோரத்தில் விடுமுறை
மார்ச் 7, 2021ஞாயிறு
மார்ச் 11, 2021மகாசிவராத்திரி
மார்ச் 14, 2021ஞாயிறு
மார்ச் 22, 2021பீகார் தினம்
மார்ச் 13, 2021இரண்டாவது சனிக்கிழமை
மார்ச் 14, 2021ஞாயிறு
மார்ச் 21, 2021ஞாயிறு
மார்ச் 27, 2021நான்காவது சனிக்கிழமை
மார்ச் 28, 2021ஞாயிறு
மார்ச் 29, 2021யோசாங் இரண்டாம் நாள்
மார்ச் 30, 2021ஹோலி பண்டிகை

தற்போது மொபைல் செயலிகள் மூலம் பணப்பரிவர்தனைகள் மேற்கொண்டு வந்தால் சில முக்கியமான விஷயங்களுக்கு நம் அனைவரும் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இம்மாதத்தில் விடுமுறை தினங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட 11 நாட்கள் வங்கிகளுக்கு முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்து கொள்ளுங்கள்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: Bank, Bank holiday