முகப்பு /செய்தி /வணிகம் / Bank Holidays: ஜூலை மாதத்தில் வங்கி பொது விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

Bank Holidays: ஜூலை மாதத்தில் வங்கி பொது விடுமுறை நாட்கள் - முழு விவரம்!

மாதிரி படம்

மாதிரி படம்

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஜூலை மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் மூடப்படும்.

வங்கிகள் ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமைகளிலும் வழக்கம் போல மூடப்படும். இருப்பினும், வங்கி விடுமுறைகள் எல்லா மாநிலங்களாலும் கடைபிடிக்கப்படுவதில்லை, மேலும் இது ஒவ்வொரு மாநிலத்தின் வழக்கத்தின் படி மாறுபடலாம். இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் ஜூலை மாதத்தில் மொத்தம் 10 நாட்கள் மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலில், பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு ஒன்பது விடுமுறைகள் உள்ளன, அதே நேரத்தில் ஆறு வழக்கமான வார விடுமுறைகளும் இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும். எனவே வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜூலை மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள் :

4 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை

10 ஜூலை 2021 - 2வது சனிக்கிழமை

11 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை

12 ஜூலை 2021 - திங்கள் - காங் (ராஜஸ்தானில் விடுமுறை), ரத் யாத்திரை (புவனேஸ்வரில் விடுமுறை)

13 ஜூலை 2021 - செவ்வாய் - பானு ஜெயந்தி/தியாகிகள் தினம் - (ஜம்மு & காஷ்மீர், சிக்கிமில் விடுமுறை)

18 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை

21 ஜூலை 2021 - செவ்வாய் - பக்ரீத் பண்டிகை (நாடு முழுவதும் விடுமுறை )

24 ஜூலை 2021 - நான்காவது சனிக்கிழமை

25 ஜூலை 2021 - ஞாயிறுக்கிழமை

31 ஜூலை 2021- சனிக்கிழமை - கெர் பூஜா

மேற்கண்ட நாட்கள் வங்கிகளுக்கு முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வார முறைகள் நாட்களான 6 விடுமுறை நாட்களை தவிர பக்ரீத் அன்று மட்டும் விடுமுறை நாளாக உள்ளது. எனவே அதற்கேற்ப முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்து கொள்ளுங்கள்.

Also read... John McAfee: ஜான் மெக்காஃபி மரணம்... டெக் உலகினர் அதிர்ச்சி - பின்னணி என்ன?

தற்போது மொபைல் செயலிகள் மூலம் பணப்பரிவர்தனைகள் மேற்கொண்டு வந்தால் சில முக்கியமான விஷயங்களுக்கு நம் அனைவரும் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இம்மாதத்தில் விடுமுறை தினங்களை அறிந்துகொண்டு அதற்கேற்ப உங்கள் திட்டங்களை வகுத்துக்கொள்ளுங்கள்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Bank holiday