முகப்பு /செய்தி /வணிகம் / Bank Holidays in July 2022 | வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. அடுத்த மாதம் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.?

Bank Holidays in July 2022 | வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. அடுத்த மாதம் மட்டும் வங்கிகளுக்கு இத்தனை நாட்கள் விடுமுறையா.?

Bank Holiday

Bank Holiday

Bank Holidays in July 2022 | வார இறுதி நாட்களைத் தவிர, நாட்டின் பல்வேறு நகரங்களில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts (வங்கி கணக்குகளை மூடுதல்) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஜூன் மாதத்தில் குறைவான நாட்கள் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறைகள் கிடைத்த நிலையில், ஜூலை மாதம் 14 நாட்கள் விடுமுறையை கொண்டுள்ளது. இதனால் இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் பொது வங்கிகளின் வாடிக்கையாளர்கள் இம்மாதம் அதிக விடுமுறை உள்ளதால் வங்கி பணிகளை முன்னதாகவே திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கிட்டதட்ட ஜூன் மாதம் நிறைவடைய உள்ள நிலையில், விரைவில் ரிசர்வ் வங்கி தயாரித்த நாட்காட்டியின் படி ஜூலையில் புதிய வங்கி விடுமுறைகள் அமலுக்கு வர உள்ளன. வார இறுதி நாட்களைத் தவிர, நாட்டின் பல்வேறு நகரங்களில், ரிசர்வ் வங்கியின் விடுமுறை காலண்டர் நிகழ்ச்சிகள் வித்தியாசமாக இருக்கும். இந்தியாவில் வங்கி விடுமுறைகள் Negotiable Instruments Act, Real-time gross settlement, Closing of bank accounts (வங்கி கணக்குகளை மூடுதல்) என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பகுதியில் நடக்கும் திருவிழாக்களை பொறுத்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு கிளைகள் மூடப்பட்டிருக்கும். இது தவிர, தேசிய விடுமுறை நாட்களில் தேசிய அளவில் வங்கி விடுமுறைகள் உள்ளன, இதனால் தனியார் மற்றும் பொதுத் துறைகளில் உள்ள அனைத்து கிளைகளும் மூடப்பட்டிருக்கும். அனைத்து பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்ட பட்டியலின் படி, ஜூலை மாதத்தில் வங்கிகள் 14 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில், ஏழு வார இறுதி விடுமுறைகள் Negotiable Instruments Act-ன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன. மீதமுள்ளநாட்கள் பிராந்திய விடுமுறைகள் அதாவது அந்தந்த மாநிலங்களுக்கான விசேஷ நாள் விடுமுறை தினங்களாகும். பல வங்கி விடுமுறைகள் பிராந்தியமானது மற்றும் மாநிலத்திற்கு மாநிலம் மற்றும் வங்கிக்கு வங்கி வேறுபடலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read : SBI வாடிக்கையாளரா நீங்கள் - இனி ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களிலும் வங்கிச் சேவைகளை பெறலாம்..

இதில் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிராந்திய விடுமுறையான பக்ரீத், ஜூலை 9 அன்று வருகிறது, இது அனைத்து வங்கிகளும் மூடப்படும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாகும். ஒரே நாளில் இரண்டு வகையான விடுமுறைகள் வருவதால் ஜூலை 9-ம் தேதி வங்கி விடுமுறையை ஒருநாளாக தான் கணக்கில் கொள்ள வேண்டும். அப்படி பார்த்தோமேயானால், ஜூலையில் 14 வங்கி விடுமுறைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.

Also Read : FIXED DEPOSIT : இதுதான் சரியான நேரம்.. பிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்திய டாப் வங்கிகள்!

ஜூலை 2022 வங்கி விடுமுறை நாட்களின் முழுமையான பட்டியல் இதோ.

Negotiable Instruments Act விடுமுறை:

ஜூலை 1: காங் (ரதஜாத்ரா)/ ரத யாத்திரை - புவனேஷ்வர்

ஜூலை 7: கர்ச்சி பூஜை - அகர்தலா

ஜூலை 9: இத்-உல்-அதா (பக்ரித்) - கொச்சி, திருவனந்தபுரம்; இது மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் நாடு முழுவதும் வங்கிகளும் மூடப்படும்

ஜூலை 11: ஈத்-உல்-அஷா - ஸ்ரீநகர், ஜம்மு

ஜூலை 13: பானு ஜெயந்தி - கேங்டாக்

ஜூலை 14: Beh Dienkhlam - ஷில்லாங்

ஜூலை 16: ஹரேலா - டேராடூன்

ஜூலை 26: கேர் பூஜை - அகர்தலா

இதைத் தவிர வார விடுமுறைகளாக 7 நாட்கள் உள்ளன. பக்ரித் பண்டிகை விடுமுறை, வாரத்தின் இரண்டாவது சனிக்கிழமையில் வருவதால் இரண்டும் ஒரே நாளாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது.

Also Read : ATM கார்டு இல்லாமலும் பணம் எடுக்கலாம்... இந்த 5 விஷயங்களை தெரிஞ்சிக்கோங்க!

வார இறுதி விடுமுறை பட்டியல்:

ஜூலை 3: முதல் ஞாயிறு

ஜூலை 9: இரண்டாவது சனிக்கிழமை + பக்ரீத்

ஜூலை 10: இரண்டாவது ஞாயிறு

ஜூலை 17: மூன்றாவது ஞாயிறு

ஜூலை 23: நான்காவது சனிக்கிழமை

ஜூலை 24: நான்காவது ஞாயிறு

ஜூலை 31: ஐந்தாவது ஞாயிறு

எனவே வங்கி வாடிக்கையாளர்களே ஜூலை மாதத்தில் ஏதாவது முக்கியமான வங்கி பணிகள் இருந்தால் உடனே உங்களுடைய கிளை மேலாளரை தொடர்பு கொண்டு வங்கி இயங்கும் நாளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது முன்னதாகவே வங்கி வேலைகளை முடிக்க திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

First published:

Tags: Bank holiday