முகப்பு /செய்தி /வணிகம் / Bank Holidays : ஜனவரியில் வங்கிகள் 16 நாட்களுக்கு செயல்படாது.. விடுமுறை விவரங்கள் உள்ளே!

Bank Holidays : ஜனவரியில் வங்கிகள் 16 நாட்களுக்கு செயல்படாது.. விடுமுறை விவரங்கள் உள்ளே!

Bank Holidays in january month : வங்கி விடுமுறை தினங்களை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் உங்கள் வேலையை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

Bank Holidays in january month : வங்கி விடுமுறை தினங்களை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் உங்கள் வேலையை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

Bank Holidays in january month : வங்கி விடுமுறை தினங்களை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் உங்கள் வேலையை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

 • 2-MIN READ
 • Last Updated :

  அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகள் வரும் மாதத்தில், அதாவது ஜனவரி 2022 இல் 16 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான விடுமுறைப் பட்டியலை (Bank Holidays) வெளியிட்டுள்ளது. அதன்படி புத்தாண்டின் முதல் மாதத்தில் வங்கித் துறைக்கு பல விடுமுறைகள் வரிசையாக வருகின்றன. ரிசர்வ் வங்கியின் (RBI) அறிவிப்பின்படி, ஜனவரி மாதத்தில் பொது விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகை விடுமுறை என்ற அடிப்படையில் மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது. இந்த விடுமுறை எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தாது என்றும் அறிவித்துள்ளது.

  ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மாநில வாரியாக ஒன்பது விடுமுறைகள் வருகின்றன. அவை இந்த வார இறுதியில் இருந்து தொடங்கும் அதாவது ஜனவரி 1ம் தேதியில் இருந்து தொடங்கும். இந்த தினங்களில் சில மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். அதேபோல மீதமுள்ள ஏழு விடுமுறை நாட்களும் வார இறுதி விடுமுறைகள் என்பதால் தேசிய அளவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இதில் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளும், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும். ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளில் வங்கிகள் திறந்திருக்கும். எனவே, உங்களுக்கு ஏதேனும் வங்கி தொடர்பான வேலை இருந்தால், ஜனவரி மாதத்தில் வங்கி விடுமுறைகள் தினங்களை சரிபார்த்துக் கொள்ளவும். இதன் மூலம் உங்கள் வேலையை தடையின்றி மேற்கொள்ள முடியும்.

  வங்கி விடுமுறைகள் பெரும்பாலும் மாநில வாரியாக இருப்பதால், கவலைப்பட வேண்டியதில்லை என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். இதன் பொருள் விடுமுறைகள் அனைத்தும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பது அர்த்தமல்ல. எடுத்துக்காட்டாக, சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி அன்று கொல்கத்தாவில் அதாவது மேற்குவங்க மாநிலத்தின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். ஆனால் நாட்டின் பிற பகுதிகளில் வங்கி சேவைகள் கிடைக்கும்.

  இதையும் படிங்க.. எஸ்பிஐ-யில் அக்கவுண்ட் தொடர நினைப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

  ரிசர்வ் வங்கியின் விடுமுறைப் பட்டியல் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மாநில வாரியான கொண்டாட்டங்கள், மத விடுமுறைகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்கள் ஆகும். இந்த விடுமுறை அறிவிப்புகள் 'பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை', 'பேச்சுவார்த்தை கருவிகள் சட்டத்தின் கீழ் விடுமுறை மற்றும் உண்மையான நேர மொத்த தீர்வு விடுமுறை' மற்றும் 'வங்கிகளின் கணக்குகளை மூடுதல்' உள்ளிட்ட மூன்று அடைப்புக்குறிகளின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில், பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் கிளைகளும் மூடப்பட்டிருக்கும்.

  வருகிற ஜனவரி மாதம் தேசிய விடுமுறைகள் இல்லை என்றாலும், பெரும்பாலான வங்கிகள் ஜனவரி 26-குடியரசு தினத்தன்று மூடப்பட்டிருக்கும். அதுவே, இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் ஜனவரி 26 ஆம் தேதி திறந்திருக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆணையின்படி, ஜனவரி 2022க்கான விடுமுறை நாட்களின் முழுப் பட்டியல் இதோ: கீழ்காணும் விடுமுறைகள் அனைத்தும் மாநிலங்களின் தலைநகரை மையப்படுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் ஜாயிண்ட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு அடிக்கடி எழும் சந்தேகம்!

  ஜனவரி 1: புத்தாண்டு தினம் - ஐஸ்வால், சென்னை, காங்டாக் மற்றும் ஷில்லாங் உள்ளிட்ட இடங்களில் வங்கிகள் செயல்படாது.

  ஜனவரி 3: புத்தாண்டு கொண்டாட்டம்/லோசூங் - ஐஸ்வால் மற்றும் கேங்டாக் பகுதிகளில் விடுமுறை.

  ஜனவரி 4: லோசூங் - கேங்டாக் பகுதியில் விடுமுறை

  ஜனவரி 11: மிஷனரி தினம் -ஐஸ்வால் பகுதியில் விடுமுறை

  ஜனவரி 12: சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் - கொல்கத்தா பகுதியில் விடுமுறை

  ஜனவரி 14: மகர சங்கராந்தி/பொங்கல்- அகமதாபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் விடுமுறை

  ஜனவரி 15: உத்தராயண புண்யகால மகர சங்கராந்தி விழா/மகே சங்கராந்தி/சங்கராந்தி/பொங்கல்/திருவள்ளுவர் தினம் - பெங்களூரு, சென்னை, காங்டாக் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட வங்கி கிளைகள் முழுவதிற்கும் விடுமுறை.

  ஜனவரி 18: தை பூசம் -சென்னை அதாவது தமிழ்நாட்டில் விடுமுறை.

  ஜனவரி 26: குடியரசு தினம் - இம்பால், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், போபால், புவனேஷ்வர், சண்டிகர் மற்றும் அகர்தலா தவிர நாடு முழுவதும் விடுமுறை.

  பல்வேறு மாநில வாரியான விடுமுறைகள் தவிர. வார இறுதி நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விஷயத்தில் வார இறுதி நாட்கள் இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான இயல்புடையவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  ஜனவரி 2: ஞாயிற்றுக்கிழமை

  ஜனவரி 8: மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை

  ஜனவரி 9: ஞாயிற்றுக்கிழமை

  ஜனவரி 16: ஞாயிற்றுக்கிழமை

  ஜனவரி 22 :மாதத்தின் நான்காவது சனிக்கிழமை

  ஜனவரி 23: ஞாயிற்றுக்கிழமை

  ஜனவரி 30: ஞாயிற்றுக்கிழமை

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  First published: