Home /News /business /

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..

ஏப்ரல் மாத வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் ? முழு விவரம் இதோ..

வங்கி விடுமுறை

வங்கி விடுமுறை

Bank Holidays in April 2022 | வார இறுதி நாட்களைத் தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது.

வார இறுதி நாட்களைத் தவிர்த்து, ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது. இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப உங்களின் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, தெலுங்கு வருட பிறப்பு, தமிழ் புத்தாண்டு போன்ற முக்கிய தினங்களில் விடுமுறை வர இருக்கிறது. காசோலை பரிவர்த்தனை, வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் பணம் எடுப்பது ஆகிய சேவைகள் பாதிக்கப்படும் என்றாலும், ஆன்லைன் பேங்கிங் சேவைகள் எப்போதும் போல செயல்படும்.

ஏப்ரல் 1ஆம் தேதியன்று புதிய நிதியாண்டு தொடங்க இருக்கிறது. மாதத்தின் முதல் விடுமுறை நாளாகவும் அது அமைகிறது. இது தவிர்த்து தேசிய அளவிலான மற்றும் பிராந்திய அளவிலான விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி பட்டியலிட்டுள்ளது. தேசிய விடுமுறை நாட்களில் நாடெங்கிலும் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். அதுவே, பிராந்திய விடுமுறை நாட்கள் என்றால், தொடர்புடைய மாநிலங்களில் மட்டும் அது அடைக்கப்பட்டிருக்கும்.

ஏப்ரல் மாத விடுமுறையின் பட்டியல்:

ஏப்ரல் 1 : கணக்குகளை முடிப்பதற்காக வங்கிகள் அன்றைய தினம் அடைக்கப்பட்டிருக்கும். நாட்டின் பெரும்பாலான இடங்களில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். அதே சமயம், ஐஸ்வால், சண்டீகர், ஷில்லாங் மற்றும் சிம்லா ஆகிய இடங்களில் மட்டும் வங்கிகள் செயல்படும்.

ஏப்ரல் 2 : சென்னை, ஹைதராபாத், பெலாப்பூர், பெங்களூரு, இம்பால், ஜம்மு, மும்பை, நாக்பூர், பனாஜி மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் தெலுங்கு வருட பிறப்பு, சஜிபு நொங்கபன்பா போன்ற பண்டிகைகள் காரணமாக விடுமுறை ஆகும்.

ஏப்ரல் 4 : சர்ஹுல் பண்டிகையை முன்னிட்டு ராஞ்சி நகரில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.

also read : மாதம் ரூ. 5000 சேமித்தால் ரூ. 40,000க்கு மேல் பென்சன் கிடைக்கும்! எப்படி தெரியுமா?

ஏப்ரல் 5 : பாபு ஜகஜீவன் ராம் பிறந்தநாள் காரணமாக ஹைதராபாதில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

ஏப்ரல் 14 : தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வைசாகி போன்ற பண்டிகைகள் காரணமாக தமிழகம் உள்பட நாட்டின் பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

ஏப்ரல் 15 : புனித வெள்ளி, வங்காள புத்தாண்டு ஆகியவை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும்.

also read : இந்த தேதிகளில் வங்கிச் சேவை பாதிக்கப்படலாம்.. ஸ்டேட் பேங்க் வாடிக்கையாளர்கள் நோட் பண்ணிக்கோங்க!

ஏப்ரல் 16 : கரியா பூஜாவை முன்னிட்டு அகர்தலா நகரில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.

ஏப்ரல் 19 : ஷாப் ஐ காதர் மற்றும் ஜுமத்-உல்-விதா நிகழ்வை முன்னிட்டு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Bank, Bank holiday

அடுத்த செய்தி