அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும், வரும் பிப்ரவரி மாதத்தில், ஜனவரி 2022 இல் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி தனது வருடாந்திர பட்டியலில் 2022 ஆம் ஆண்டுக்கான வங்கி விடுமுறை நாட்களை ஏற்கனவே சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. கடந்த மாதத்திலேயே, பொது விடுமுறை மற்றும் உள்ளூர் பண்டிகைகள் என்று 16 நாட்கள் வங்கிககளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, இந்த மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் பட்டியல் இங்கே.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப் படி, 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் மாநில வாரியாக பொருந்தும். இந்த விடுமுறை நாட்களில் வார இறுதி நாட்களும் அடங்கியுள்ளது. அரசு விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் ஆகிய இரண்டு அடிப்படையிலும், பிப்ரவரி மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறை நாட்கள், அந்தந்த மாநிலத்தில் இருக்கும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், பிராந்திய வங்கிகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மூடப்பட்டிருக்கும்.
மத்திய வங்கி, வங்கி விடுமுறை நாட்களை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது.
செலாவணி முறிச் சட்டம் (Negotiable Instruments Act) மற்றும் ரியல்-டைம் கிராஸ் செட்டில்மென்ட் (RTGS) விடுமுறை
செலாவணி முறிச் சட்ட அடிப்படையில் விடுமுறை
வங்கிக் கணக்குகள் மூடுதல் விடுமுறை
மாநில வாரியான விடுமுறைகள்
திரிபுரா மாநிலத்தின் அகர்தலா, ஓடிச மாநிலத்தின் புவனேஸ்வர் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா ஆகிய மூன்று இடங்களில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி, வசந்த பஞ்சமியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க ... முக்கிய அப்டேட்... வேலையை விட்டு போனால் இனி பிஎஃப் அக்கவுண்டில் நீங்களே இதை செய்து கொள்ளலாம்!
மேலும், சண்டிகரில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 16 அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில நகரங்களான மும்பை மற்றும் நாக்பூரில், சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 19 அன்று அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022 க்கான வங்கி விடுமுறை பட்டியல்:
விடுமுறை தேதி | விடுமுறை |
பிப்ரவரி 2, 2022 | சோனம் லோச்சார் (கேங்டாக்) |
பிப்ரவரி 5, 2022 | சரஸ்வதி பூஜை/ ஸ்ரீ பஞ்சமி/ஸ்ரீ பஞ்சமி பசந்த் பஞ்சமி (அகர்தலா, புவனேஸ்வர், கொல்கத்தா) |
பிப்ரவரி 6, 2022 | ஞாயிறு |
பிப்ரவரி 12, 2022 | மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை |
பிப்ரவரி 16, 2022 | ஞாயிறு |
பிப்ரவரி 16, 2022 | முகமது ஹஸ்ரத் அலி பிறந்தநாள்/லூயிஸ்-நாகை-நி (மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் நகரம்; உத்தரப் பிரதேசத்த மாநிலத்தின் உள்ள கான்பூர் மற்றும் லக்னோ நகரங்கள்) |
பிப்ரவரி 16, 2022 | குரு ரவிதாஸ் ஜெயந்தி (சண்டிகர்) |
பிப்ரவரி 18, 2022 | டோல்ஜத்ரா (கொல்கத்தா) |
பிப்ரவரி 19, 2022 | சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஜெயந்தி (பேலாப்பூர், மும்பை மற்றும் நாக்பூர்) |
பிப்ரவரி 20, 2022 | ஞாயிறு |
பிப்ரவரி 26, 2022 | மாதத்தின் நான்காவது சனிக்கிழமை |
பிப்ரவரி 27, 2022 | ஞாயிறு |
அனைத்து தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளும், வரும் பிப்ரவரி மாதத்தில், ஜனவரி 2022 இல் 12 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank holiday, Holidays