அரசையும் மக்களையும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளையும் இணைக்கும் ஒரு நாட்டின் நிதி நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க உதவுகின்றன வங்கிகள். நம் நாட்டில் பண்டிகை காலம் மெதுவாக துவங்கி வரும் நிலையில், அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் 2022-ல் நிறைய விடுமுறை நாட்களை பெற உள்ளனர் வங்கி ஊழியர்கள். இந்த ஜூலையில் 14 வங்கி விடுமுறைகள் இருந்தது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான வங்கி விடுமுறைப் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவில் உள்ள வங்கிகள் சுமார் 18 நாட்களுக்கு மூடப்படும், இதில் வார விடுமுறை நாட்களும் அடங்கும்.
எனவே வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கிளைகளுக்கு செல்லும் முன் விடுமுறை பட்டியலைச் சரி பார்த்துகொள்ள வேண்டும். பட்டியலில் உள்ள சில விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே உரியவை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளை உள்ளடக்கியது. ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகள் 18 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்றாலும், வாடிக்கையாளர்கள் கவலைப்பட தேவை இல்லை. ஏனெனில் ஆன்லைன் இன்டர்நெட் பேங்கிங் சர்விஸ்கள் வழக்கம் போல் கிடைக்கும்.
முன்பே குறிப்பிட்டபடி ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் உள்ளன, இதில் 6 வார இறுதி விடுமுறைகள், 13 பிராந்திய விடுமுறைகள் உள்ளன. இரண்டையும் சேர்த்தால் 19 வங்கி விடுமுறைகள் என்றாலும் இம்பாலின் பிராந்திய விடுமுறையான தேசபக்தர் தினம் ஆகஸ்ட் 13 அன்று வருகிறது, இது அனைத்து வங்கிகளும் மூடப்படும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையாகும். எனவே தான் வரும் ஆகஸ்டில் 18 வங்கி விடுமுறைகள் என்று குறிப்பிடுகிறோம்.
ரிசர்வ் வங்கி பட்டியலின்படி 2022 ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறைகளின் முழு பட்டியல் இங்கே:
Negotiable Instruments Act சட்டத்தின் கீழ் விடுமுறை நாட்களின் பட்டியல்..
ஆகஸ்ட் 1: ட்ருக்பா ட்ஷே ஷி (கேங்டாக் - சிக்கிம் தலைநகர்)
ஆகஸ்ட் 8: மொஹரம் (அஷூரா) - ஜம்மு, ஸ்ரீநகர்
ஆகஸ்ட் 9: மொஹரம் (ஆஷுரா) - அகர்தலா, அகமதாபாத், பேலாப்பூர், பெங்களூரு, போபால், சென்னை, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி
Also Read : SBI வாடிக்கையாளரா நீங்கள்.? இந்த புதிய வசதி உங்களுக்கு தான்
ஆகஸ்ட் 11: ரக்ஷா பந்தன் - அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 12: ரக்ஷா பந்தன் - கான்பூர் மற்றும் லக்னோ
ஆகஸ்ட் 13: தேசபக்தர் தினம் - இம்பால்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம் - இந்தியா முழுவதும்
ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) - பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்
ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி - புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ
Also Read : சேவிங்க்ஸ் அக்கவுண்டுக்கு 7% வரை வட்டி கிடைக்கும்.. உடனே கிளம்புங்கள்!
ஆகஸ்ட் 19: ஜன்மாஷ்டமி (Shravan Vad-8)/ கிருஷ்ண ஜெயந்தி — அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா
ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி - ஹைதராபாத்
ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி - கவுகாத்தி
ஆகஸ்ட் 31: விநாயக சதுர்த்தி - அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி
வார இறுதி விடுமுறை நாட்கள்..
ஆகஸ்ட் 7: முதல் ஞாயிறு
ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை மற்றும் தேசபக்தர் தினம்
ஆகஸ்ட் 14: இரண்டாவது ஞாயிறு
ஆகஸ்ட் 21: மூன்றாவது ஞாயிறு
ஆகஸ்ட் 27: நான்காவது சனி
ஆகஸ்ட் 28: நான்காவது ஞாயிறு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank holiday, India