ஏப்ரல் மாதத்தை பொறுத்தவரையில் வங்கிகளுக்கு இந்த வாரத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் பணப்பரிவர்த்தனை, ஏடிஎம் பரிவர்த்தனை போன்ற சேவைகள் பாதிக்கப்படலாம். இதனால் வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது அவசியம்.
ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வருகிறது என ஏற்கெனவே ரிசர்வ் வங்கி வெளியிட்ட விடுமுறை பட்டியலில் தெரிவித்திருந்தது. ரிசர்வ் வங்கி இந்த தகவலை முன்கூட்டியே தெரிவிப்பதற்கு காரணம், வாடிக்கையாளர்கள்
விடுமுறை நாட்களை தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப தங்களின் வங்கி சார்ந்த நடவடிக்கைகளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்கு தான். வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை என்றால் காசோலை பரிவர்த்தனை, வங்கிகளில் பணம் செலுத்துவது மற்றும் பணம் எடுப்பது ஆகிய சேவைகள் பாதிக்கப்படும் . இதனை வாடிக்கையாளர்கள் திட்டமிட வேண்டும்.
PF Account : மாத சம்பளக்காரர்கள் இருமடங்கு இழப்பில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்கள்!
அதே போல், வங்கி விடுமுறை தினங்களிலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் எப்போதும் போல செயல்படும். இந்நிலையில் இந்த ஏப்ரல் மாதத்தில் இந்த வாரத்தில் 14 முதல், 15, 16, 17 என தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த தினம், மஹாவீர் ஜெயந்தி, வைசாகி போன்ற பண்டிகைகள் காரணமாக தமிழகம் உள்பட நாட்டின் பல இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும்.
IOB : திடீர் அறிவிப்பு.. அந்த திட்டத்திற்கு மட்டும் வட்டியை குறைத்தது!
ஏப்ரல் 15, புனித வெள்ளி, வங்காள புத்தாண்டு ஆகியவை காரணமாக விடுமுறை, ஏப்ரல் 16 கரியா பூஜாவை முன்னிட்டு அகர்தலா நகரில் வங்கிகளுக்கு விடுமுறை ஆகும். (இது அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே பொருந்தும்) வழக்கம் போல் ஏப்ரம் 17 ஞாயிறு விடுமுறை. மாநிலங்களுக்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அறிவிக்கிறது. எனவே வாடிக்கையாளர்கள் அடுத்த 4 நாட்களுக்கான நிதி பரிவர்த்தனை குறித்து முன்பே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். முடிந்த வரை தேவையான பணத்தை எடிஎம்மில் முன்கூட்டியே எடுத்துக் கொள்ளுங்கள். கடைசி நேர குழப்பத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.