ஹோம் /நியூஸ் /வணிகம் /

ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!

ஒரு தனி மனிதர் எத்தனை கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவது நல்லது? விடை இதோ!

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு

பல கார்டுகள் உங்களிடம் பயனற்ற நிலையில் இருந்தால், தேவையில்லாத ஒன்றை உடனடியாக முடித்துக் கொள்ளவும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நடுத்தர வர்க்கம் மற்றும் சாமானியர்கள் பணப் பற்றாக்குறையை சமாளிக்க மிகவும் உதவிகரமாக இருப்பது கிரெடிட் கார்டு ஆகும். கொரோனாவுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கையை காட்டிலும் தற்போது மிக அதிக கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

  நாடு முழுவதிலும் கடந்த ஜூலை 2022ஆம் தேதி நிலவரப்படி 8.03 கோடி கிரெடிட் கார்டுகள் இருக்கின்றனவாம். நம் ஒவ்வொருவர் கையிலும் கூட ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகள் உள்ளன. ஆக, நாம் எத்தனை கார்டுகள் தான் வைத்துக் கொள்ளலாம் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை இந்த செய்தியில் பார்க்கலாம்.

  சொத்து பத்திரங்கள் தொலைந்து போனால் உடனே செய்யவேண்டிய 5 விஷயங்கள்!

  ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுக்கு நான் விண்ணப்பிக்கலாமா?

  ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டு இருப்பது நல்லது தான். ஏனெனில் அவசர காலங்களில் ஒரு கார்டு வேலை செய்யாமல் போனாலும், மற்றொரு கார்டை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பல கார்டுகளை மேலாண்மை செய்வதும், உரிய நேரத்தில் தவணைகளை திருப்பிச் செலுத்துவதும் தான் சிக்கலான விஷயம்.

  எந்த கார்டு தேவை என்பதை எப்படி தீர்மானிப்பது?

  உங்களுக்கான தேவைகள் மற்றும் முன்னுரிமைகள் பொறுத்து கிரெடிட் கார்டுகளை நீங்கள் தேர்வு செய்யலாம். உதாரணத்திற்கு நீங்கள் மிக அதிகமாக ஷாப்பிங் செய்பவர் என்றால் அதற்கு சலுகை அளிக்கும் கார்டுகளை தேர்வு செய்யலாம். அதுபோல அதிக பயணம் செய்பவர் என்றால் டிக்கெட் மற்றும் ஹோட்டல் ரூம் புக்கிங் சலுகைகளை தரும் கார்டுகளை தேர்வு செய்யலாம்.

  வெவ்வேறு சேவைதாரர்களை தேர்வு செய்ய வேண்டுமா?

  ஆமாம். ஆமெக்ஸ், டைனர் கிளப், மாஸ்டர் கார்டு, ரூபே, விசா கார்டு என வெவ்வேறு சேவைதாரர்களை தேர்வு செய்யுங்கள். எதில் அதிகமான கேஷ்பேக் மற்றும் ரிவார்டுகள் கிடைக்கின்றதோ அது உங்களுக்கு பலனுள்ளதாக அமையும்.

  3 பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இடம் உண்டா?

  கடன் வரம்பு அதிகரிக்குமா?

  நிச்சயமாக ஒரு கார்டில் உங்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது என்றால், மற்றொரு கார்டிலும் உங்களுக்கு ரூ.2 லட்சம் கடன் கிடைக்கும் பட்சத்தில், ஆக மொத்தம் ரூ.4 லட்சம் கடன் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், ரொம்பவும் அவசரப்படாமல் மாத சம்பளத்திற்கு ஏற்றவாறு கடன் பெற வேண்டும்.

  பல கார்டுகளுக்கான பில்களை கணக்கீடு செய்வது எப்படி?

  நீங்கள் உங்கள் வங்கி சேமிப்பு கணக்கில் இசிஎஸ் பேமெண்ட் முறையை ஆக்டிவ் செய்து வைக்கலாம். அதேபோல, அனைத்து கிரெடிட் கார்டு பெண்டிங் தொகையை டிராக் செய்து, உரிய சமயத்தில் நினைவூட்டுவதற்கான ஆப்-களை உபயோகிக்கலாம்.

  பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை என்ன செய்வது?

  பல கார்டுகள் உங்களிடம் பயனற்ற நிலையில் இருந்தால், தேவையில்லாத ஒன்றை உடனடியாக முடித்துக் கொள்ளவும். நிலுவை தொகையை செலுத்தி விட்டு, வங்கி அல்லது நிதி சேவையாளருக்கு கடிதம் அல்லது இமெயில் மூலமாக தகவல் தெரிவித்து கிரெடிட் கார்டுகளை முடிவுக்கு கொண்டு வரவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Bank, Credit Card, Savings