வங்கிப் பரிவர்த்தனைகளைப் பொருத்தவரை மோசடி ஏற்படாமல் பாதுகாக்க அவ்வப்போது பல்வேறு மாற்றங்களுக்கு உட்படும். அந்த வகையில் சமீபத்தில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி காசோலை பயன்படுத்தும் விதிகளை மாற்றியுள்ளது. இதனால் காசோலை மோசடிகள் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக காசோலையை யாரும் தவறாக பயன்படுத்த விடக்கூடாது என்பதற்காக எல்லா வங்கிகளுமே குறிப்பிட்ட சில விதிமுறைகளை பின்பற்றி வருகிறது. அதில் காசோலையின் தேதி 6 மாதத்திற்கு மேல் இருந்தால் செல்லுபடியாகாது, காசோலையில் எழுதப்பட்டிருக்கும் பெயர் மற்றும் தொகையில் அடித்தல் திருத்தல் இல்லாமல் இருக்கவேண்டும், காசோலை வழங்கியவரின் கையெழுத்து வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் கையெழுத்து ஒத்துப்போக வேண்டும், QR கோடு ஸ்கேனர்,ஆகியவை முக்கியமானவை.
அது மட்டுமின்றி ஒரு சில சமயங்களில் நீங்கள் ஒருவருக்கு காசோலையை வழங்கியிருந்தாலும், அது வங்கியில் கிளியரன்ஸ் ஆகும்போது நீங்கள் தான் தான் காசோலையை வழங்கி உள்ளீர்கள் என்பதை உங்களை அழைத்து உறுதி செய்யும். காசோலை பற்றி ஏதேனும் சந்தேகம் இருந்தாலோ அல்லது காசோலை பெரிய தொகைக்கு வழங்கப்பட்டிருந்தாலோ, இந்த நடைமுறை பின்பற்றப்படும்.
இதையும் படிங்க.. போஸ்ட் ஆபீஸில் அக்கவுண்ட் இருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும்... வந்திருக்கும் புதிய மாற்றங்கள்!
ஏகப்பட்ட மோசடிகள் நடந்து வருவதை தடுக்கும் விதமாக, ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல் படி, பேங்க் ஆப் பரோடா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க.. குடும்பத்திற்காக ஒரு நல்ல பாலிசியை தேடுகிறீர்களா? இதை கொஞ்சம் பாருங்க!
பேங்க் ஆப் பரோடா
வாடிக்கையாளர்கள் அதிக தொகைக்கு உள்ள காசோலைகளை வழங்கும் போது அதைப் பற்றிய விவரங்களை வங்கிக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதனால் வங்கியில் காசோலை கிளியரன்ஸ் ஆகும் போதோ அல்லது கவுண்ட்டரில் காசோலை பணமாக்கப் படும் போதோ, மோசடி பற்றிய கவலை இல்லாமல் காசோலையை உடனடியாக பிராசஸ் செய்யலாம். இதனால், காசோலை கிளியரன்ஸ் செய்யும் ஒவ்வொரு முறையும், வாடிக்கையாளரை அழைத்து விவரங்களை சரிபார்க்க வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பான முறையில் காசோலை பேமெண்ட்டுகளை செயல்படுத்தலாம்.
எனவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தாங்கள் வழங்கியுள்ள காசோலை பற்றிய விவரங்களை வழங்கி விட்டால் அதனை சிடிஎஸ் கிளேரிங் அல்லது கவுண்டரில் கிளியர் செல்லும் செயல்முறை எளிதாகிறது.
பிப்ரவரி 1 முதல்
பேங்க் ஆஃப் பரோடா இந்த விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தை பேங்க் ஆஃப் பரோடா பாசிட்டிவ் பே சிஸ்டம் என்ற திட்டத்தின் கீழ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
வங்கி தற்போது 50,000 ரூபாய்க்கு மேல் காசோலை வழங்குபவர்களின் கணக்குகளில் இந்த திட்டத்தை ஆக்டிவேட் செய்ய இருக்கிறது. அதே போல, 5 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான தொகைக்கு காசோலை வழங்குபவர்களுக்கு இந்த திட்டம் கட்டாயமாக்கப் படுகிறது. அதாவது, பெரிய தொகைக்கு காசோலை வழங்குபவர்கள் அதைப்பற்றிய விவரங்களை வங்கிக்கு அறிவிக்க வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.