பள்ளி செல்லும் பருவ வயது குழந்தைகள் மற்றும் கல்லூரிகளுக்குச் செல்லும் இளைஞர்களுக்கு அன்றாடம் பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை பெற்றோர் வழங்குகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டீன்களில் டீ, காஃபி, கூல்டிரிங்க்ஸ் அருந்துவது அல்லது வார இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து திரையரங்குகளுக்கு படம் பார்க்க செல்வது போன்ற செலவினங்களுக்கு இந்தத் தொகையை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
பெற்றோர் எவ்வளவு தான் பணம் கொடுத்தாலும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று சில குழந்தைகள் சொல்வது உண்டு. இன்னும் சில இடங்களில், பெற்றோர் கொடுத்த பணத்தில் ஒரு பாதியை மட்டும் செலவு செய்து விட்டு, எஞ்சியுள்ள பணத்தை சிறுக, சிறுக சேமித்து பெரும் தொகையாக மாற்றுபவர்களும் உண்டு.
இந்த வருடம் படிப்புக்காக லோன் வாங்க போறீங்களா? இந்த தவறையெல்லாம் செய்யாதீர்கள்!
அதே சமயம், ஒவ்வொரு மாதமும் பிள்ளைகளுக்கு எவ்வளவு கொடுத்தோம், அவர்கள் எவ்வளவு பணம் செலவு செய்திருக்கின்றனர் என்ற கணக்கு புரியாமல் பல பெற்றோர் குழம்புவது உண்டு. ஒருவேளை இந்த கணக்கு தெரிந்திருந்தால், மாதந்தோறும் குடும்ப பட்ஜெட்டில் பிள்ளைகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவும் வசதியாக இருக்கும்.
சேமிப்புக் கணக்கு ஏன் அவசியமானது
குழந்தைகள் அவ்வபோது பெற்றோரிடம் பாக்கெட் மணி கேட்பதால், அந்தந்த சமயத்திற்கு தகுந்தாற்போல ஏதோவொரு தொகையை பெற்றோர் கொடுத்து விடுகின்றனர். இதை வைத்து, அவர்கள் ஏதோ ஒரு வகையில் சமாளித்து விடுகின்றனர் என்றாலும் கூட, அடுத்த செலவு வரும்போது மீண்டும் பெற்றோரிடம் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களது மனதில் நிரம்பியிருக்கிறது.
இத்தகைய சூழலில், தனக்கான பட்ஜெட் எவ்வளவு, ஒரு மாதத்தில் நாம் எவ்வளவு செலவு செய்கிறோம் என்ற விவரங்களை பிள்ளைகள் உணருவதில்லை.
குறிப்பாக, இதுதான் நமக்கான லிமிட், இந்தப் பணத்திற்குள் நாம் இந்த மாதத்தை சமாளித்துக் கொள்ள வேண்டும் என்ற திட்டமிடுதல் பிள்ளைகளிடம் இருப்பதில்லை. ஆகவே, இத்தகைய சூழலில், வளர் இளம் பருவ வயதினருக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது அவசியமாகிறது. தத்தமது வரவு, செலவுகளை அவர்கள் திட்டமிட்டுக் கொள்வதற்கு இது உதவியாக இருக்கிறது.
கம்மியான வட்டியில் கடன் தரும் வங்கிகளின் லிஸ்ட்.. 1 லட்சத்திற்கு இவ்வளவு தான் ஈஎம்ஐ!
எல்லோருக்கு வங்கி கணக்கு சாத்தியமா?
கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருப்பின் அவர்களுக்கு வங்கிக் கணக்கு திறப்பதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. மற்ற வாடிக்கையாளர்களைப் போலவே அனைத்து சேவை வசதிகளுடன் வங்கிக் கணக்குகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், 18 வயதுக்கும் குறைவான வளர் இளம் பருவத்தில் உள்ள குழந்தைகள் வங்கிக் கணக்கு திறப்பதற்கு பல நிபந்தனைகள் உள்ளன.
18 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு ‘மாணவர் கணக்கு’ என்ற பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வங்கிகள் அனுமதிக்கின்றன. ஆனால், இதில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவை வசதிகளும் கிடைக்காது. இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் பணம் செலுத்தலாம் மற்றும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மூன்றாம் நபர்களுக்கான பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது.
இருப்பினும், வங்கிச் சேவைகள் எப்படி செயல்படுகின்றன என்பதை இளம் வயதிலேயே தெரிந்து கொள்ள அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும். தனக்கு எவ்வளவு பணம் தரப்படுகிறது, அதை நாம் எந்த அளவுக்கு பொறுப்புடன் செலவு செய்திருக்கிறோம், எவ்வளவு தொகையை சேமித்திருக்கிறோம் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள இது உதவியாக இருக்கும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank accounts, Savings