Home /News /business /

வங்கியில் எந்த வகையான அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்!

வங்கியில் எந்த வகையான அக்கவுண்ட் வைத்திருந்தாலும் சரி.. இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சு இருக்கணும்!

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

90 நாட்கள் அதாவது 3 மாதத்திற்குள் டெபாசிட் செய்வதற்கு பணம் திரும்பி அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடியும் சமீபத்தில் வங்கிகளுக்கு வலியுறுத்தியுறுத்தி இருந்தார்.

    வங்கியில் சேவிங்க்ஸ் அக்கவுண்ட் அல்லது பிக்சட் டெபாசிட் என பணத்தை சேமிக்கும் கணக்குகளை வைத்திருப்பவர்கள் அடிப்படையாக சில தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது அவசியமான ஒன்று. அந்த வகையில் இன்று வங்கிகளில் பணத்தை சேமிக்கும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் பற்றி பார்க்க போகிறோம்.

    கடந்த ஆண்டு வங்கிகளில் பணத்தை போட்டவர்கள் அதிகம் பயந்தது இந்த செய்திக்கு தான்.’வங்கிகள் திவால்’. கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த பணத்தை வங்கியில் சேமிப்பது, எதிர் கால செலவுக்காக பணத்தை போட்டு வைத்தவர்கள், ரிட்டர்மெண்ட் பணத்தை பிக்சட் டெபாசிட் கணக்கில் போட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டி பணத்தை நம்பி வாழ்பவர்கள் என அனைத்து வகையான வங்கி வாடிக்கையாளர்களும் இதை நினைத்து அச்சம் கொண்டனர். அதில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.

    இதையும் படிங்க.. இன்று முதல் ATM கார்டை பயன்படுத்தும் போது அதிக கவனம் தேவை! வந்திருக்கும் ரூல்ஸ் அப்படி

    ஆனால் அந்த பயம் தேவையில்லாதது. ஏன் தெரியுமா? வங்கிகள் திவால் ஆனாலும் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். எப்படி தெரியுமா? வங்கிக் கணக்கிலும் ஐந்து லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். இது கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது உறுதி செய்யப்பட்டது. 90 நாட்கள் அதாவது 3 மாதத்திற்குள் டெபாசிட் செய்வதற்கு பணம் திரும்பி அளிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடியும் சமீபத்தில் வங்கிகளுக்கு வலியுறுத்தியுறுத்தி இருந்தார்.

    இந்த காப்பீட்டின் வரைமுறை:

    நீங்கள் ஒரே வங்கியில் அதே சமயம் வெவ்வேறு கிளைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் வைத்திருந்தால் அனைத்து கணக்குகளுக்கும் சேர்த்து ரூ. 5 லட்சம் வரைக்கும் தான் காப்பீட்டுப் பலன்.

    இதையும் படிங்க.. ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் இவை தான்!

    அதே சமயம், ஜாயிண்ட் அக்கவுண்ட், குழந்தைகளின் பெயரில் கணக்கு, கூட்டு குடும்ப கணக்கு, வணிக கணக்குகள் ஆகியவை ஒரே வங்கியில் இருந்தால் அவைகள் தனித்தனி கணக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு அந்த கணக்குக்கு ரூ. 5 லட்சம் காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இதுப் போன்ற முக்கியமான தகவலை அறிந்து கொள்வது அவசர சூழ்நிலையில் கண்டிப்பாக பயன் தரும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Bank accounts, Savings

    அடுத்த செய்தி