Home /News /business /

இந்த கணக்கு இருந்தால் போதும்.. அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லாமலே பணம் எடுக்கலாம் தெரியுமா?

இந்த கணக்கு இருந்தால் போதும்.. அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லாமலே பணம் எடுக்கலாம் தெரியுமா?

ஜன் தன் யோஜனா

ஜன் தன் யோஜனா

100 நாள் வேலை அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருந்தாலே போதும்.

    மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஜன் தன் யோஜனா திட்டத்தில் இருக்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் குறித்து தான் பார்க்க போகிறோம்.

    எல்லோருக்கும் வங்கி சேவை என்ற அடிப்படையில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தில் அனைவரும் எளிமையாக வங்கி கணக்கு தொடங்க முடியும். அதுமட்டுமில்லை அப்படி தொடங்குபவருக்கு சலுகைகள், காப்பீடு திட்டங்கள், கடன் ஆகியவை எளிமையாக கிடைக்கின்றன. இந்த திட்டத்தில் கிடைக்கும் பயன்கள் குறித்து தான் முழுமையாக பார்க்க போகிறோம். இந்த கணக்கை தொடங்குபவர்களுக்கு காப்பீடு திட்டங்களுடன் ஓய்வுதியம் மற்றும் மத்திய, மாநில அரசின் நிதியுதவிகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

    நீங்கள் இந்த ஜன் தன் கணக்கை தொடங்க வேண்டும் என்றால் வங்கி அல்லது அஞ்சல் நிலையம் செல்ல வேண்டும். அங்கு இந்த திட்டத்திற்கான படிவத்தை நிரப்பி சமர்பித்தாலே போதும் உங்கள் பெயரில் ஜன் தன் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கை தொடங்கிய விவசாயிகள் இதன் மூலமாகவே கிஷான் அட்டைகளையும் பெற்றுக் கொள்ளலாம். அதே போல் இந்த கணக்கில் விபத்துக் காப்பீடாக ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது. ஆயுள் காப்பீடாக ரூ.30,000 உண்டு. எல்லா சேமிப்பு கணக்கு போலவே இதற்கு வட்டி உண்டு மற்றும் அனைத்து பேக்கிங் சேவைகளும் வழங்கப்படுகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அது தவிர்த்து இந்த கணக்கில் ஓவர் டிராஃப்ட் வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வங்கி கணக்கு தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு இந்த ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் அக்கவுண்டில் பேலன்ஸ் இல்லையென்றாலும் ஒரு குறிப்பிட்ட தொகை வரை உங்களால் எடுக்க முடியும். இந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு பணப்பரிவர்த்தனைக்காக ரூபே டெபிட் கார்டுகள் வழங்கப்படுகின்றன.

    குறிப்பாக பெண்கள் ஜன் தன் கணக்கு மூலமாக காப்பீடு, பென்சன் போன்ற நிதியுதவிகளை எளிதாக பெற முடியும். இந்த கணக்கை உங்களிடம் ஆதார் கார்டு, பான் கார்டு, 100 நாள் வேலை அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை இருந்தாலே போதும். எளிமையாக  தொடங்கி பயன்பெறலாம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Bank, News On Instagram

    அடுத்த செய்தி