முகப்பு /செய்தி /வணிகம் / வங்கியில் இருக்கும் இந்த சேமிப்பு கணக்குகளை பற்றி தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்!

வங்கியில் இருக்கும் இந்த சேமிப்பு கணக்குகளை பற்றி தெரிந்து கொள்வது ரொம்ப ரொம்ப முக்கியம்!

சேமிப்பு கணக்கு

சேமிப்பு கணக்கு

இது வழக்கமான சேமிப்புக் கணக்கைப் போலவே செயல்படுகிறது, ஆனால் வட்டி அதிகம்.

  • Last Updated :

வங்கியில் இருக்கும் சேமிப்பு கணக்குகளின் வகைகள் மற்றும் அதற்கான சலுகைகள் பற்றி இன்று தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான மக்களுக்கு தெரிந்தது, சேமிப்பு கணக்கு, கரணட் அக்கவுண்ட், பிக்சட் டெபாசிட் கணக்கு. காரணம்  இதுக்குறித்த தகவல்கள் தான் அதிகம் பகிரப்படுவதால் பார்க்கப்படுவதால் இந்த கணக்குகள் மட்டும் தான் பணத்தை சேமிக்கும் கணக்கு என பலர் நினைத்துக் கொண்டிருக்கிறனர். ஆனால் வங்கியில் பல வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. பணத்தை சேமிப்பது மட்டும் தான் நோக்கம் என்றாலும் ஆனால் இப்படி கணக்கை தேர்ந்தெடுத்து பிரித்து போட்டால் பலன் பெறலாம். அதற்கான சலுகைகளையும் நீங்கள் பெற தகுதி உடையவர்களாக இருப்பீர்கள். அந்த வகையில் வங்கிகளில் இருக்கும் சேமிப்பு கணக்குகளின் வகைகளை பார்க்கலாம்.

மைனர்கள் சேமிப்பு கணக்குகள் குழந்தைகளுக்கானது, குறைந்தபட்ச இருப்பு தேவையில்லை. இந்த சேமிப்புக் கணக்கு குழந்தைகளின் படிப்புக்கான வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். குழந்தைக்கு 10 வயதாகும்போது, ​​அவர் தனது கணக்கை தானே இயக்க முடியும். குழந்தைக்கு 18 வயது இருக்கும்போது, ​​அது வழக்கமான சேமிப்புக் கணக்காக மாறும். அடுத்தது பெண்கள் சேமிக்கும் கணக்குகள்.இதில் பல வகையான அம்சங்கள் உள்ளன. பெண்களுக்கு கடன்களுக்கு குறைந்த வட்டி, டிமேட் கணக்கைத் தொடங்க இலவச கட்டணம் மற்றும் பல்வேறு வகையான கொள்முதல் மீதான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன.

சம்பள சேமிப்பு கணக்குகள் ஊழியர்களுக்காக நிறுவனங்கள் சார்பாக திறக்கின்றன. அத்தகைய கணக்கிற்கு வங்கிகள் வட்டி வழங்குகின்றன. இது ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க பயன்படுகிறது. மூன்று மாதங்களுக்கு சம்பளம் வரவில்லை என்றால், அது வழக்கமான சேமிப்புக் கணக்காக மாறும்.அடுத்தது மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு. இது வழக்கமான சேமிப்புக் கணக்கைப் போலவே செயல்படுகிறது, ஆனால் வட்டி அதிகம்.

பாதியில் விட்ட படிப்பை தொடர லோன் வேண்டுமா? வட்டி எங்க கம்மின்னு தெரிஞ்சிக்கோங்க!

இந்த வங்கிக் கணக்கு மூத்த குடிமக்களின் சேமிப்புத் திட்டங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது, இதிலிருந்து ஓய்வூதிய நிதி அல்லது ஓய்வூதியக் கணக்குகளிலிருந்து நிதி திரும்பப் பெறப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Savings