வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கியுள்ளது. உங்கள் வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள் எனப்படும் கேஓய்சி மூலமாக வங்கி கணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி போன்ற முக்கியமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதனால் தான் இப்போது வங்கிகளில் மட்டுமின்றி, புதிதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது உள்ளிட்ட எந்தவொரு நிதி சார்ந்த விவகாரங்களுக்கும் KYC-க்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.
வங்கிகளில் கேஓய்சி செய்முறையை பூர்த்தி செய்ய, பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் பயன்படுத்தப்படுகிறது. கேஓய்சி சரிபார்க்கும் நடவடிக்கையின் படி பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், மேற்கூறிய ஆவணங்களில் ஒன்றிணை இணைத்து, அதனை சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரி அல்லது நிதி நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரிஜினல் அடையாள அட்டையை நேரில் சரிபார்த்த பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
சாமானிய மக்களுக்கும் ரூ.10 லட்சம் விபத்து காப்பீடு ...எந்த வங்கியில் கிடைக்கும்? முழு விபரம்!
இதில் வங்கி, நிதி நிறுவனங்கள், முதலீடுகள் என ஒவ்வொற்றிற்கு தனித்தனி படிவங்கள், ஆவணங்களைக் கொண்ட கேஓய்சி-யைப் பூர்த்தி செய்வதற்கு பதிலாக சென்ட்ரல் கேஓய்சி (CKYC) என்ற திட்டம் ரிசர்வ் வங்கியால் (RBI) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI), இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையம் (IRDAI) மூலமாக கேஓய்சி ஆவணங்களை ஒருமுறை சரிபார்த்தாலே போதும், சென்ட்ரல் KYC (cKYC) அனைத்து வாடிக்கையாளர் தகவல்களையும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் அணுகக்கூடிய ஒரு மத்திய சேவையகத்தில் சேமித்து வைக்கும்.
இதன் பின்னர் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு நிதிச்சேவையை தொடங்கவும் கேஓய்சி தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது, அதற்கு பதிலாக சென்ட்ரல் கேஓய்சி செய்யப்பட்டதற்கான 14 இலக்க அடையாள எண்ணை வழங்கினாலே போதும்.இந்நிலையில் தனி நபர் குறிப்பிட்ட அல்லது பிற வங்கிகளில் எத்தனை கணக்குகளை வைத்துள்ளார் என்பது பற்றிய தகவல்களையும் பல்வேறு வங்கிகளும் அறிந்து கொள்ள முடியும் என்பதால், சென்ட்ரல் கேஓய்சியின் நோக்கம் வாடிக்கையாளர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலை பார்த்த ஓய்வூதியதாரர்களுக்கு இந்த வயதில் மட்டும் கூடுதல் பென்ஷன்!
அதாவது மணி லாண்ட்ரிங்கை தடுப்பதற்காக கேஓய்சி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் ஒரே நபர் பல கணக்குகளை ஆரம்பித்து மோசடியில் ஈடுபடுவதை தடுப்பதற்காக சிகேஓய்சி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
அதாவது ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு அல்லது சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற அதிக வட்டி மற்றும் வரிச்சலுகைகளை தரக்கூடிய கணக்குகளை மூத்த குடிமக்களின் பெயரில் ஆரம்பித்து, நிதி மோசடியில் ஈடுபடுவதைக் கண்டுபிடிப்பதே சென்ட்ரல் கேஓய்சியின் முக்கிய நோக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் ஒரே வங்கியின் வெவ்வேறு கிளைகளில் ஒரே மாதிரியான கணக்குகளை திறக்க வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது முழு வங்கி அமைக்கும் இந்த தடை அமல்படுத்தப்பட்டு வாடிக்கையாளர்கள் நிறைய வங்கி கணக்குகளை திறப்பதை தடுக்கலாம் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஆனால் இதுகுறித்து முன்னாள் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் கூறுகையில், “சிகேஒய்சியின் நோக்கம் நிதி சம்பந்தமான கணக்குகளை திறப்பதை எளிதாக்குவது தானோ தவிர, அதைக் கட்டுப்படுத்துவது அல்ல” என தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhar, Bank accounts, Savings, Voters ID