பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை முந்துகிறது வங்கதேசம்..!

வங்கதேச வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் பங்காற்றின. வங்கதேச வளர்ச்சியில் ஜவுளித்துறையின் பங்கு 80 சதவிகிதம்.

பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவை முந்துகிறது வங்கதேசம்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: October 4, 2019, 8:31 PM IST
  • Share this:
தெற்காசிய பொருளாதார வளர்ச்சி விகிதாச்சாரத்தில் அமைதியாக முதலிடத்தை நோக்கி முன்னேறி வருகிறது வங்கதேசம்.

தெற்காசிய பொருளாதர வளர்ச்சி குறித்து ‘ஆசிய வளர்ச்சி 2019’ என்ற தலைப்பில் Outlook என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. தெற்கு ஆசிய நாடுகளில் இந்தியா முன்னோடியாக உலகத்தின் கவனத்தைப் பெற்ற நாடாக உள்ளது. ஆனால், அமைதியாக வங்கதேசம் இந்தியாவைப் பொருளாதார வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளி வருகிறது.

சமீப காலமாக இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி சரிந்து வரும் சூழலில் வங்கதேசம் இந்தியாவைக் கடந்து முன்னேறிக்கொண்டு உள்ளது. 2016-ம் ஆண்டில் 8.2 சதவிகிதமாக இருந்த இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 2018-ம் ஆண்டில் 7.0 சதவிகிதமானது. ஆனால், இதேகாலகட்டத்தில் வங்கதேச ஜிடிபி வளர்ச்சி அதிகரித்துக் கொண்டு இருந்துள்ளது.


2016-ம் ஆண்டு 7.1 சதவிகிதமாக இருந்த வங்கதேச ஜிடிபி வளர்ச்சி 2018-ம் ஆண்டு 7.9 சதவிகிதமாக உயர்ந்தது. 2019-ம் ஆண்டு இந்தியா 7.2 சதவிகித வளர்ச்சியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ள வேளையில் வங்கதேச வளர்ச்சி 8.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் புள்ளி விவரப் பட்டியல் ஆசிய வளர்ச்சி வங்கியால் வெளியிடப்பட்டது ஆகும்.

1990-களில் உலகின் அதிவிரைவாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா விளங்கியது. இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சிக்கு 60 சதவிகிதம் பங்காற்றியது சேவை சார்ந்த துறைகள். ஆனால், இதே காலகட்டத்தில் வங்கதேச வளர்ச்சிக்கு தொழிற்சாலைகள் பங்காற்றின. வங்கதேச வளர்ச்சியில் ஜவுளித்துறையின் பங்கு 80 சதவிகிதம்.

இதனால், சேவைத்துறையைச் சார்ந்த இந்தியாவைவிட தொழிற்துறையைச் சார்ந்த வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்தது. இதுவே பொருளாதார வளர்ச்சி நிலையில் இந்தியாவை வங்கதேசம் முந்திச்செல்ல உதவுகிறது.மேலும் பார்க்க: கடன் வழங்கும் தொழிலில் இருந்து விலகும் ரிலையன்ஸ் கேப்பிடல்..!

100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் பெண் தொழிலதிபர் மது சரண்
First published: October 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்