அஞ்சல் அலுவலகத்தில் அளிக்கப்படும் பல் ஜீவன் பீமா யோஜனா என்ற குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இந்திய அஞ்சல் அலுவலகத்தில் வழங்கப்படும் இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தின் மூலம் தினசரி வெறும் 6 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஒரு லட்சம் வரை இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.
அதாவது குழந்தைகளுக்காக துவங்கப்பட்டுள்ள இந்த ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் மூலம், ஒருவேளை உங்கள் குழந்தை எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் பலன்கள்:
எதிர்பாராத விதமாக உங்கள் குழந்தைகள் உயிரிழக்கும் பட்சத்தில், குடும்பங்களில பொருளாதார நிலை பாதிக்காமல் பல் ஜீவன் பீமா யோஜனா திட்டம் பாதுகாப்பு வழங்குகிறது. குழந்தையின் பெயரில் துவங்கப்பட்ட காப்பீட்டு திட்டத்தில் தினசரி 6 ரூபாய் டெபாசிட் செய்து வர வேண்டும். பிறகு எதிர்பாராத உயிரிழப்புகளின்போது ஒரு லட்சம் ரூபாய் வரை இந்த காப்பீட்டு திட்டத்திலிருந்து இழப்பிட்டுத் தொகை பெற முடியும். குழந்தைகளுக்கு செய்யப்பட்ட மருத்துவ செலவுகள், படிப்பு செலவுகள் ஆகியவற்றை முடிந்த அளவு சரி செய்வதற்கு இந்த திட்டம் உதவுகிறது.
பல் ஜீவன் பீமா யோஜனாவின் மற்றொரு பயன் என்னவெனில் சேமிப்பு மற்றும் பொருளாதார நிலையை சமாளிப்பதன் முக்கியத்துவத்தை குழந்தைகள் இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும். தினசரி செய்யப்படும் இந்த 6 ரூபாய் சேமிப்புகளின் மூலம் ஒழுக்கத்தையும், பொருளாதார நிலையில் திட்டமிடுதலின் அவசியத்தையும் மிக இளம் வயதிலேயே குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டுமெனில் குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் யாரேனும் அருகில் உள்ள தபால் நிலையத்தை அணுகி அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். குழந்தைகளின் பெயர், வயது, முகவரி ஆகியவற்றை பூர்த்தி செய்த பிறகு வீட்டு முகவரி மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.
யாரெல்லாம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்:
பல் ஜீவன் பீமா யோஜனா திட்டம் 8-ல் இருந்து 12 வயது வரை உடைய குழந்தைகளின் பெயரில் விண்ணப்பிக்கலாம். ஆனால் நீங்கள் எடுக்கும் இந்த காப்பீட்டு திட்டமானது, அந்த குழந்தை 18 வயது நிரம்பும் வரைதான் செல்லுபடி ஆகும். உதாரணத்திற்கு நீங்கள் பத்து வயதில் இந்த காப்பீட்டு திட்டத்திற்கு விண்ணப்பித்திருந்தால், உங்கள் குழந்தை 18 வயது பூர்த்தியான பின் உயிரிழக்கும் பட்சத்தில் உங்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்படாது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Business, Post Office, Savings, Tamil Nadu