பஜாஜ் சேட்டக் புக்கிங்ஸ் புதிதாக 24 நகரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு! 

பஜாஜ் சேட்டக் புக்கிங்ஸ் புதிதாக 24 நகரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு! 

பஜாஜ் சேட்டக்

Bajaj Chetak இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகும்.

  • Share this:
பஜாஜ் நிறுவனத்தின் முதல் ஆல்-எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய ஒரு வருடம் கழித்து, பஜாஜ் ஆட்டோ இந்த நிதியாண்டில் மேலும் 24 நகரங்களில் Chetak -க்கிற்கான புக்கிங்ஸ்களைத் திறக்க தயாராக உள்ளது. ஆரம்பத்தில் முன்பதிவுகளை புனே மற்றும் பெங்களூருக்கு மட்டுமே ரெஸ்ட்ரிக்ட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. Chetak-க்கிற்கு சக்தி அளிக்கும் பேட்டரி செல்கள் வழங்குவதில் இடையூறு ஏற்பட்டதால், திட்டமிட்டபடி பஜாஜால் அதிக நகரங்களில் முன்பதிவுகளைத் திறக்க முடியவில்லை. 

இந்த பேட்டரி செல்களை சீனாவில் COVID-19 தொற்றுநோயின் மையமான வுஹானில் இருந்து பஜாஜ் ஆட்டோவின் இந்தியா விற்பனையாளர் வாங்க வேண்டும். இதனால் Bajaj Chetak-க்கிற்கான முன்பதிவு இன்னும் மூடப்பட்டுள்ளது. Moneycontrol செய்திக்கு இதுகுறித்து தகவல் அளித்த பஜாஜ் ஆட்டோவின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் சர்மாகூறியதாவது: “இந்த நேரத்தில் அதிகமான நகரங்களை புக்கிங்கிற்குள் சேர்ப்பதற்கான கட்டத்தை நாங்கள் இன்னும் எட்டவில்லை, இது சற்று ஏமாற்றமளிக்கிறது, ஏனெனில் நாங்கள் விநியோகச் சங்கிலி சிக்கல்களால்பாதிக்கப்பட்டுள்ளோம். 

முதலில், இது வுஹானிலிருந்து எலக்ட்ரானிக் காப்போனேன்ட்ஸ்கள்  வாங்குவதில் ஒரு சிக்கல் மற்றும் COVID ன் தாக்கம் என தொடர் சோதனைகள் இருந்தது. COVID க்கு பிறகு சேமிகண்டக்டர்ஸ்களில்  சுணக்கம் ஏற்பட்டது, இது மீண்டும் குறுக்கீடுகளை ஏற்படுத்தியது. விநியோகச் சங்கிலியில் இந்த பாதிப்பு இருப்பதால், Chetakக்கிற்கான முன்பதிவுகளை மீண்டும் ஓபன் செய்வதில் நாங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருந்தோம்.” 

2020 பிப்ரவரி மாதத்தில் அவுட்புட்டானது முற்றிலுமாக நிறுத்தப்பட்ட பின்னர் புனேவுக்கு அருகிலுள்ள சக்கான் தொழிற்சாலை  ஜூன் முதல் electric Chetak ஐ உற்பத்தி செய்தது. மின்சார வாகனத்தை கட்டுப்படுத்தும் மென்பொருள் புரோகிராம் தேவையான ஒரு முக்கிய அங்கமான சேமிகண்டக்டர்ஸ்கள் கிடைப்பதில் உலகளாவிய பற்றாக்குறை காரணமாக டிசம்பர் மாதத்தில் உற்பத்தி மீண்டும் பாதிக்கப்பட்டது. 

எனினும் "எங்களுக்கு மக்களிடம் நல்ல பதில் கிடைத்தது. எங்களிடம் இப்போது 50,000 ரிஜிஸ்ட்ரேஷன்கள் உள்ளன, இது அடிப்படையில் புக்கிங்ஸ்களை மீண்டும் திறக்கக் காத்திருக்கும் மக்களிடமிருந்து வந்த ஆர்வத்தின் வெளிப்பாடாகும். Chetak-க்கின் புக்கிங்ஸ்களை மீண்டும் திறக்க நாங்கள் விரும்புகிறோம்," என்று சர்மா கூறினார். BloombergNEF ன் அறிக்கையின்படி, உலகின் லித்தியம் செல் உற்பத்தி திறனில் கிட்டத்தட்ட நான்கில்-மூன்று பகுதியை சீனா கட்டுப்படுத்துகிறது. 

ஒரு சில வாகன நிறுவனங்கள் இந்தியாவில் பேட்டரி-செல் உற்பத்தி ஆலைகளை நிறுவும் பணியைத் தொடங்கியுள்ள நிலையில் இது வரவேற்கத்தக்க செய்தியாக உள்ளது. நாட்டிற்குள் பேட்டரி பேக்ஸ்கள் உருவாக்கப்பட்டாலும், செல்கள் இன்னும் இறக்குமதி செய்யப்பட வேண்டும். "அடுத்த 2-3 மாதங்களில் இந்த சிக்கல்கள் தீர்ந்துவிடும் என்று நாங்கள் நம்புகிறோம், புனே மற்றும் பெங்களூரில் முன்பதிவு செய்வதற்கு மட்டும் எங்கள் நிகழ்ச்சி நிரலுக்கு வருவோம், ஆனால் இந்தியாவில் இரண்டு டஜன் நகரங்களுக்குச் செல்வதற்கான முதன்மை திட்டம் உள்ளது அது அடுத்த நிதியாண்டில் தான்”, என்று சர்மா மேலும் கூறினார். 

ரூ .100,000 க்கு Bajaj Chetak இந்தியாவில் கிடைக்கும் மிகவும் விலையுயர்ந்த மின்சார இரு சக்கர வாகனங்களில் ஒன்றாகும், இது மிகவும் மலிவான பல்சரை விட மிக அதிகம், பஜாஜின் மிகவும் பிரபலமான பைக் பிராண்டான Pulsar ரூ .70,000 க்கு கிடைக்கிறது. 6 கலர்ஸ்கள் மற்றும் 2 வேரியண்ட்ஸ்களைக் கொண்ட Chetakக்கின் விநியோகங்கள் வருகிற பிப்ரவரி இறுதி முதல் மீண்டும் தொடங்கும். 

பைக்கை முன்பதிவு செய்த கஸ்டமர்களுக்கு மட்டுமே டெலிவரிகள் கிடைக்கும். இ-ஸ்கூட்டரை சில்லறை விற்பனை செய்வதற்காக பெங்களூரில் சுமார் 13 டீலர்ஷிப்களும், புனேவில் நான்கு டீலர்ஷிப்களும் ஒதுக்கப்பட்டன.

 

 
Published by:Tamilmalar Natarajan
First published: