Home /News /business /

ஜான்சன் & ஜான்சன் பிரச்னை - பிற பவுடர் நிறுவனங்களும் கண்காணிப்பு!

ஜான்சன் & ஜான்சன் பிரச்னை - பிற பவுடர் நிறுவனங்களும் கண்காணிப்பு!

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது தற்போது இது போன்று 9,000-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்று நோய் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கலப்படங்கள் உள்ளதாக வந்த நீதிமன்ற தீர்ப்பு மற்றும் சர்ச்சைகளை அடுத்து இந்தியாவில் அனைத்து பேபி பவுடர்கள் நிறுவனங்களும் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர்.

    மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஜான்சன் & ஜான்சன் மட்டும் இல்லாமல் ஹிமாலயா மற்றும் சிக்கோ உள்ளிட்ட பேபி பவுடர், ஷாம்பு, சோப்பு தயாரிப்புகளின் 200 மாதிரிகளைச் சோதனைக்குப்படுத்தி வருகிறது.

    இந்தச் சோதனை நடைபெற முக்கியக் காரணம் சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க ஊடகம் ஒன்று ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய கலப்படங்கள் இருப்பது குறித்து 20 வருடங்களுக்கு முன்பே அதன் நிறுவனர்களுக்குத் தெரியும் எனச் செய்தி வெளியிட்டது ஆகும்.

    மேலும் இந்தச் செய்தி உலகம் முழுவதும் பறவ ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பேபி பவுடரை சந்தையில் இருந்து திரும்பப் பெறும் முயற்சியிலும் இறங்கியது. இந்திய மருந்துகள் கட்டுப்பாடு துறை ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள இரண்டு பவுடர் உற்பத்தி ஆலையில் உள்ள மூலப்பொருட்களை எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

    ஜூலை மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு வழக்கில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் புற்று நோய் ஏற்படுத்தக்கூடிய கலப்படங்கள் இருந்ததாக 4.7 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது தற்போது இது போன்று 9,000-க்கு மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    மேலும் பார்க்க: பிளாஸ்டிக் ஒழிப்பை பற்றிய விழிப்புணர்வு குறும்படம்
    Published by:Tamilarasu J
    First published:

    Tags: Johnson and johnson

    அடுத்த செய்தி