கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜைக்கான பொருட்களின் விற்பனை மந்தம்

கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜைக்கான பொருட்களின் விற்பனை மந்தம்
  • Share this:
தமிழகத்தில் ஆயுத பூஜைக்கு பொதுமக்கள் தயாராகிவரும் நிலையில், பூஜை பொருட்களின் விற்பனை களைகட்டியது. ஒரு சில இடங்களில் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

நவராத்திரி பண்டிகையின் 9வது நாளான நாளை ஆயுதபூஜையும், நாளை மறுநாள் விஜயதசமி விழாவும் கொண்டாடப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் பூஜைக்குத் தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டிருந்தாலும், 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால், விற்பனை மந்தமாகவே உள்ளது.

தருமபுரி சந்தையில் குண்டுமல்லி 400-ல் இருந்து 600 ரூபாயாக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் 400 ரூபாய்க்கும், சாமந்தி 250 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ், சம்பங்கி தலா 200 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 75 டன் பூக்கள் குவிக்கப்பட்டுள்ள


திண்டுக்கல் மார்க்கெட்டில், மல்லிகை பூ கிலோ ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் முதல் 1200 வரை விற்பனையாகிறது. முல்லை 400 முதல் 600 வரையும், கனகாம்பரம் 300 முதல் 400 வரையும் விற்பனை செய்யப்படுகிறது. வாடாமல்லி, செண்டுமல்லி, கதம்ப வகைகள் கிலோ ஒன்றுக்கு 100 முதல் 120 வரை விற்கப்படுகிறது.திருப்பூரிலும் மல்லிகைப்பூ கிலோ 1,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. முல்லைப்பூ 500 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 480 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. செவ்வந்திப்பூ 320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நாமக்கல்லில் லாரி உரிமையாளர்கள் ஆயுத பூஜை பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். பூக்கள், பழங்கள், பூசணிக்காய், வாழைக்கன்று, வண்ண தோரணங்கள், அலங்கார பொருட்களின் விற்பனை களைகட்டியது.

கோவை பூ மார்க்கெட்டில் கடந்த ஆண்டைக் காட்டிலும் விற்பனை மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள், பொதுமக்களும் கூறினர்.

First published: October 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading