2022 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி முதல் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை ஆக்சிஸ் வங்கி உயர்த்தியுள்ளது. பிக்சட் டெபாசிட் திட்டங்களின் கால அளவுகள் 7 நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை உள்ள நிலையில், அதற்கு ஏற்றாற்போல வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.
சமீபத்தில் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில், 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான டெர்ம் டெபாசிட் திட்டங்களுக்கு ஆக்சிஸ் வங்கி 5.25 சதவீத வட்டியை வழங்குகிறது.
இதையும் படிங்க.. பாக்கியாவா இப்படி? ஆடிப்போய் நின்ற கோபி! பாக்கியலட்சுமியில் உச்சக்கட்ட திருப்பம்
திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள்
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 2.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 2.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 2.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 2.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை : பொதுமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 4 சதவீதம் வட்டி வழங்குகிறது.
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை : பொதுமக்களுக்கு - 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 ஆண்டு வரை : பொதுமக்களுக்கு - 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
1 ஆண்டு : பொதுமக்களுக்கு - 4.40 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 4.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
read more.. EPFO : உங்கள் பிஎஃப் கணக்கில் புதிய பேங்க் அக்கவுண்ட்டை சேர்க்க வேண்டுமா? இதை செய்யுங்கள்!
1 ஆண்டு 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
2 ஆண்டு 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 5.10 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 5.60 சதவீதம் வட்டி வழங்குகிறது.
3 ஆண்டு 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 5.45 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 5.95 சதவீதம் வட்டி வழங்குகிறது.
5 ஆண்டு 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை : பொதுமக்களுக்கு - 5.75 சதவீதம் வட்டி வழங்குகிறது; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.