வங்கிகளுக்கு என்று பொதுவான விதிமுறைகள் இருந்தாலும், ஒவ்வொரு வங்கியும் பிரத்யேகமான ஒரு சில விதிகளை மேற்கொள்ளும். அந்த அடிப்படையில் தனியார் வங்கி முதல் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் வரை சேமிப்பு கணக்கில் மினிமம் பேலன்ஸ் எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை முறை ஏடிஎம்களில் இலவசமாக பணம் எடுக்கலாம், எத்தனை முறை இலவசமாக பணம் டெபாசிட் செய்யலாம் என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.
மெட்ரோ நகரங்கள் மற்றும் பெருநகரங்களில் ஈசி சேவிங்ஸ் மற்றும் அதேபோல இருக்கும் சேமிப்பு கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை அதிகரித்துள்ளது ஆக்சிஸ் வங்கி. இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய தனியார் வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் வங்கி, சமீபத்தில் இதனுடைய நிதி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸ் :
ஒவ்வொரு சேமிப்பு கணக்குக்கு குறைந்தபட்சம் ஒரு தொகை மினிமம் பேலன்ஸாக அதாவது கணக்கில் எப்போதுமே இருக்க வேண்டும் என்று ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு வங்கியும் நிர்ணயித்துள்ளது.
ஒரு சில வங்கிகளுக்கு ₹500 குறைந்தபட்ச இருப்பாக இருக்க வேண்டும். சில வங்கிகளில் சேமிப்பு கணக்கிற்கு ₹5000 ரூபாய் மினிமம் பேலன்ஸாக இருக்க வேண்டும் என்று கூறப்படும்.
அந்த வகையில் ஆக்சிஸ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஈசி சேவிங்ஸ் என்ற சேமிப்பு கணக்கிற்கு மற்றும் அதே போல இருக்கும் வேறு சில சேமிப்பு கணக்குகளுக்கும் குறைந்தபட்ச தொகையாக மினிமம் பேலன்ஸ் ஆக ₹12,000 இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதற்கு முன்பு இத்தகைய சேமிப்பு கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் ₹10,000 வரை இருந்தால் போதும் என்று வங்கி நிர்ணயித்திருந்தது.
read more. PF Account : மாத சம்பளக்காரர்கள் இருமடங்கு இழப்பில் இருந்து தப்பிக்க இதை செய்திடுங்கள்!
அதாவது நீங்கள் ஆக்சிஸ் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தால் உங்கள் வங்கிக் கணக்கில் எப்போதுமே குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ₹12,000 இருக்க வேண்டும்.
சேமிப்பு கணக்கு மினிமம் பேலன்ஸ் அதிகரிப்பு, மெட்ரோ மற்றும் அர்பன் நகரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று வங்கி கூறியுள்ளது. மினிமம் பேலன்ஸ் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கும் ஆக்சிஸ் வங்கி சேமிப்புக் கணக்குக்கு மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும், என்றும் ஸீரோ பேலன்ஸ் கணக்குகளுக்கு அல்லது வங்கியின் வேறு சில கணக்குகளுக்கு இது பொருந்தாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி இந்த மினிமம் பேலன்ஸ் தொகை அதிகரிப்பு என்பது உள்நாட்டு சேமிப்பு கணக்குகள் மற்றும் என்ஆர்ஐ சேமிப்பு கணக்குகள் என்ற இரண்டு கணக்குகளுக்குமே பொருந்தும். அது மட்டுமின்றி டிஜிட்டல் மற்றும் சேவிங்ஸ் SBEZY ஈக்வலன்ட், ஸ்மார்ட் ப்ரிவிலேஜ் மற்றும் வேறு சில கணக்குகளுக்கும் பொருந்தும்.
மினிமம் பேலன்ஸ் தொகையை உங்கள் கணக்கில் நீங்கள் பராமரிக்க விட்டால் அதற்கு உரிய கட்டணம் விதிக்கப்படும். இதுவும் ஒவ்வொரு வங்கிக்கு ஏற்றவாறு மாறும். மேலும் விவரங்களுக்கு ஆக்சிஸ் வங்கியின் அதிகாரப்பூர்வமான வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இலவச கேஷ் டிரான்சாக்ஷன் வரம்பு :
இதற்கு அடுத்ததாக கேஷ் டிரான்சாக்ஷன், அதாவது பணம் பரிவர்த்தனை சம்பந்தப்பட்ட விதிகளிலும் மாற்றங்களை அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ₹2,00,000 வரை பணப்பரிவர்த்தனை இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது ₹1,50,000 என்று குறைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய இந்த விதிகள் ஏப்ரல் 1 2022 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bank, Bank accounts, Savings