Home /News /business /

முக்கியமான திட்டத்தின் வட்டியை திருத்திய ஆக்சிஸ் வங்கி! எல்லாமே மாறுது!

முக்கியமான திட்டத்தின் வட்டியை திருத்திய ஆக்சிஸ் வங்கி! எல்லாமே மாறுது!

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

ரூ 2 கோடியில் இருந்து ரூ 100 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள மொத்த FD களுக்கும் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆக்சிஸ் வங்கி தனது நிலையான வைப்பு திட்டத்தின் விகிதங்களை (fixed deposit interest) செப்டம்பர் 20, 2022 முதல் மாற்றியமைத்துள்ளது.

    பிரபல தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கியில் செயல்பாட்டில் இருக்கும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய கால சேமிப்பு தொடங்கி நீண்ட கால சேமிப்பு, அதற்கு சரியான வட்டி என வாடிக்கையாளர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளது ஆக்சிஸ் வங்கி. அந்த வகையில் வங்கி தனது  பிக்சட் டெபாசிட் திட்டம் குறித்து அண்மையில் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு குறித்து ஏற்கெனவே முதலீடு செய்து இருப்பவர்கள், இனிவரும் காலங்களில் சேமிப்பை தொடங்க இருப்பவர்கள் இருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.

    மாதந்தோறும் ரூ. 50,000 வரை பென்சன் கிடைக்கும்.. கலக்கும் எல்.ஐ.சி திட்டம்!

    ரூ. 2 கோடிக்கும் குறைவான FDகளுக்கு, வங்கி 2.75% முதல் 5.75% வரையிலான விகிதங்களை வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 2.75% முதல் 6.50% வரை. குறைந்தபட்சம் 7 நாட்கள் முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை ஆக்சிஸ் வங்கியில் ஒரு டெபாசிட்டர் FDகளை தேர்வு செய்யலாம். தற்போது ரூ 2 கோடியில் இருந்து ரூ 100 கோடி மற்றும் அதற்கு மேல் உள்ள மொத்த FD களுக்கும் வட்டி விகிதங்கள் திருத்தப்பட்டுள்ளன.

    Indian Bank : நினைத்ததை விட அதிக லாபம்.. இந்தியன் வங்கி தரும் இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

    திருத்தப்பட்ட வட்டி விவரங்கள்:

    ஆக்சிஸ் வங்கி பொதுப் பிரிவினருக்கு ரூ. 2 கோடிக்குக் குறைவான FD திட்டங்களுக்கு 1 ஆண்டு 11 நாட்கள், 1 ஆண்டு 25 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவுக்கு 5.75% வட்டி வழங்குகிறது.

    இதுவே 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டங்கள் என்றால் 5.70% வழங்குகிறது, அதே சமயம் 1 ஆண்டு 25 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான திட்டங்களின் வட்டி 5.60%  ஆகும். 1 வருடம் முதல் 1 வருடம் மற்றும் 11 நாட்களுக்கு குறைவான காலம் கொண்ட திட்டங்களுக்கு 5.45% வழங்குகிறது.9 மாதங்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான கால அளவை  கொண்ட திட்டத்திற்கு 4.75% வட்டி கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

    6 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவான காலம்  கொண்ட பிக்சட் டெபாசிட் திட்டத்தின்  வட்டி 4.65% ஆகும், அதே சமயம் 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான தவணைகளுக்கு வட்டி விகிதம் 3.75% ஆகும். 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான காலம் வரை உள்ள திட்டங்களுக்கு 3.25% , 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை உள்ள திட்டத்தின் வட்டி 2.75% ஆகும்.

    மூத்த குடிமக்கள்

    ரூ. 2 கோடிக்குக் குறைவான FDகளில், 1 வருடம் 11 நாட்கள் , 1 வருடம் 25 நாட்கள் மற்றும் 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 6.50% வழங்குகிறது. 2 வருடங்கள் முதல் 5 வருடங்கள் வரை உள்ள திட்டத்திற்கு 6.45% வீதம். மேலும், 1 ஆண்டு 25 நாட்கள் முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான காலவரையறையில் உள்ள திட்டத்தின் வட்டி 6.35% ஆகும்.

    6 மாதங்கள் முதல் 9 மாதங்களுக்கும் குறைவான காலம் வரை உள்ள பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 4.90% வட்டி, மேலும், 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவான காலம் வரை உள்ள திட்டத்திற்கு வட்டி 3.75% வீதம். 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கும் குறைவான காலம் வரை கொண்ட திட்டத்துக்கு 3.25% வட்டி வழங்குகிறது. 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரையிலான குறுகிய கால முதலீடுக்கு வங்கி வழங்கும் வட்டித்தொகை 2.75% ஆகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Bank, Fixed Deposit, Savings

    அடுத்த செய்தி