• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • டெபாட்சிட் பணத்தை முன்கூட்டியே எடுத்தால் 'அபராதம் இல்லை' - ஆக்சிஸ் வங்கி அறிவிப்பு!

டெபாட்சிட் பணத்தை முன்கூட்டியே எடுத்தால் 'அபராதம் இல்லை' - ஆக்சிஸ் வங்கி அறிவிப்பு!

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி

டெபாசிட் பணத்தை அபராதம் இல்லாம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம் என ஆக்சிஸ் வங்கி அறிவித்திருந்தாலும் அதற்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
டெபாசிட் தொகைகளை முதிர்வு காலத்துக்கு முன்பே எந்தவித அபராதமும் இல்லாம் முழுத்தொகையையும் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ளலாம் என ஆக்சிஸ் வங்கி அறிவித்துள்ளது.

சேமிப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானது என்றாலும், கையில் இருக்கும் பணத்தை எங்கே சேமிப்பது, எந்த திட்டத்தில் சேமிப்பது என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் நீண்ட நாள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இருந்தாலும், அவரச தேவைக்கு உடனடியாக பணத்தை எடுத்துக்கொள்ளும்படியான திட்டத்தை மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். வங்கிகளில் சேமித்தால், முதிர்வு காலத்துக்கு முன்பு எடுக்க முடியாத நிலை உள்ளது. அதனையும்மீறி டெபாசிட் தொகையை எடுக்கும்பட்சத்தில் வட்டி குறைப்பு, அதிகப்படியான அபராதத்தொகை ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், நீண்டநாள் டெபாட்சிட் (deposit) திட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆக்சிஸ் வங்கி புதிய அறிவிப்பு : 

பணத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும், அதேவேளையில் குறிப்பிட்ட கால இடைவெளியில், அதாவது முதிர்வு காலத்துக்கு முன்பே டெபாசிட் தொகையை எடுத்துக்கொள்ளக்கூடிய வசதி இருக்க வேண்டும். அந்த திட்டங்களில் அபராதம் மற்றும் வட்டி குறைப்பு ஆகியவை இருக்கக்கூடாது என மக்கள் விரும்புகின்றனர். அப்படியான, ஒரு திட்டத்தை தனியார் வங்கியான ஆக்ஸிஸ் வங்கி (Axis Bank) அறிவித்துள்ளது. 

அந்த வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, அனைத்து வகையான ரீட்டெய்ல் டெபாசிட் திட்டங்களிலும், அபராதம் இல்லாமல் முன்கூட்டியே பணம் எடுத்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது. 2020, டிசம்பர் 15ம் தேதிக்கு முன்னர் அல்லது அதன்பிறகு போடப்பட்ட 2 ஆண்டுகளுக்கு மேலான டெபாசிட் திட்டங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. மேலும், அனைத்து விதமான புதிய டெபாசிட் மற்றும் ரெக்கரிங் டெபாசிட் (recurring deposits) திட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Also read... Gold Rate | சற்று குறைந்தது தங்கம் விலை, உயர்ந்தது வெள்ளியின் விலை... இன்றைய நிலவரம் என்ன?

ஆக்சிஸ் வங்கி விதிக்கும் அபராதம் : 

டெபாசிட் பணத்தை அபராதம் இல்லாம் முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம் என ஆக்சிஸ் வங்கி அறிவித்திருந்தாலும் அதற்கு சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலான டெபாசிட் திட்டங்களில் முழு தொகையையும் அபராதம் இல்லாமல் எடுக்க விரும்புவோர், 15 மாதங்களுக்குப் பிறகு மட்டுமே எடுக்க முடியும். அதற்கு முன்கூட்டியே எடுத்தால் கனிசமான தொகை அபராதம் விதிக்கப்படும் என ஆக்சிஸ் விளக்கியுள்ளது.  

ஆனால், டெபாசிட் முழுத்தொகையில் 25 விழுக்காடு முன்கூட்டியே எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு எந்தவித அபராதமும் விதிக்கப்படாது என ஆக்சிஸ் வங்கி கூறியுள்ளது. நீண்ட கால டெபாசிட் திட்டங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான தேவைகள் மற்றும் சௌகரியத்தை மையப்படுத்தி இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆக்சிஸ் வங்கியின் பிரவீன் பாட் (Praveen Bhatt) தெரிவித்துள்ளார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: