• HOME
  • »
  • NEWS
  • »
  • business
  • »
  • அடுத்த ஆண்டில் அதிக ஊதிய உயர்வு: எந்தெந்த துறையினருக்கு கிடைக்க வாய்ப்பு!

அடுத்த ஆண்டில் அதிக ஊதிய உயர்வு: எந்தெந்த துறையினருக்கு கிடைக்க வாய்ப்பு!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

2021ம் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா காரணமாக ஒருவித அழுத்தத்தில் இருந்தன. தற்போது அவற்றின் பாதை நேர்மறையாக மாறியுள்ளது. இதனால் ஊதியத்தை அதிகளவு உயர்த்த அவை திட்டமிட்டுள்ளன.

  • Share this:
    கொரோனா பெருந்தொற்றில் இருந்து நாடு மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. இந்தியாவில்  மூன்று முக்கியத் துறைகளில்  பணியாற்றும் ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு மிகப்பெரிய அளவில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தியாவில் கொரோனா காரணமாக பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. வேலைவாய்ப்பும் குறைந்துபோனது. தற்போது தொற்று பரவல் குறையத் தொடங்கியதையடுத்து நாட்டின் பொருளாதாரம் மெல்ல மெல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்லத் தொடங்கியது. கொரோனா இரண்டாவது அலை நாட்டை கடுமையாக தாக்கிய போதிலும், பல்வேறு இந்திய நிறுவனங்கள் தங்களது எதிர்தெறிதல் திறனை வெளிப்படுத்தின.  மேலும் இந்த ஆண்டு சராசரியாக 8.8 சதவிகிதத்தில் உள்ள சம்பள உயர்வு 2022 ஆம் ஆண்டில் சராசரியாக 9.4 சதவிகிதமாக உயரும் என்று ஆய்வு ஒன்றில் கணிக்கப்பட்டுள்ளது.

    ஏயான் (aon) நிறுவனம் வெளியிட்டுள்ள ‘26வது வருடாந்திர ஊதிய உயர்வு ‘ ஆய்வில்  பெரும்பாலான நிறுவனங்கள் 2022ம் ஆண்டு தொடர்பாக நம்பிக்கையான பார்வையை கொண்டுள்ளனர். 98.9 சதவீத நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க திட்டமிட்டுள்ளன. 2021ம் ஆண்டில் இது 97.5 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.  பெரும்பாலான துறைகளில் நேர்மறையான எண்ணங்கள் நிலவுகிறது. மீட்புப் பாதையில் நிறுவனங்கள் உறுதியாக உள்ளன. 2019ம் ஆண்டில் இருந்த ஊதிய உயர்வு நிலையை  எட்ட பெரும்பாலான நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

    “இது நிதி ஆரோக்கியம் மற்றும் பொருளாதார எழுச்சிக்கான வலுவான அறிகுறியாகும். 2020ம் ஆண்டில்  6.1 சதவீதமாக இருந்த ஊதிய உயர்வு, 2021ம் ஆண்டில் 8.8. சதவீதம் வரை சென்றுள்ளது. 2022ம் ஆண்டு அது 9.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று ஏயான் நிறுவனத்தின் மனித மூலதன வணிகத்தின் பங்குதாரர் ரூபங்க் சவுத்ரி கூறினார்.

    இதையும் படிக்க: வேலைக்கு செல்லும் பெண்கள் தினமும் ரூ.76 சேமித்தால் என்ன நடக்கும் தெரியுமா?


    நிறுவனங்களுக்கான டிஜிட்டல் பயணத்தை கொரோனா தொற்றுக் காலம் துரிதப்படுத்தியுள்ளதாகவும், டிஜிட்டலில் திறமையானவர்களுக்கான முன்னெப்போதும் இல்லாத போட்டி குறுகிய காலத்தில் உருவாகியுள்ளதாகவும் திறமைகளுக்கான போட்டிக்கு ஏற்றவாறு வணிகங்கள் தங்கள் திறமை உத்திகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் ரூபங்க் சவுத்ரி தெரிவித்தார்.

    பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற துறைகளில் உள்ள பெரும்பாலான இந்திய நிறுவனங்கள், வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக்கொள்ள டிஜிட்டல் திறன்களில் முதலீடு செய்கின்றன. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட ஊழியர்கள் 2021 ஆம் ஆண்டில் மிகவும் வெற்றிகரமாக உள்ளனர், ஏனெனில் இந்தத் துறைகளில் உள்ள ஊழியர்களுக்கு மிக உயர்ந்த சம்பள உயர்வை நாங்கள் காண்கிறோம். காலப்போக்கில் இந்த போக்கு தீவிரமடையும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் நிறுவனங்களில் இத்தகைய திறமையாளிகளுக்கு தேவை உள்ளது என்றும் அவர் கூறினார்.

    மேலும் படிக்க: ரிடையர்மெண்ட் வாங்கியவர்கள் இதில் பணத்தை சேமித்தால் என்னைக்குமே ராஜா தான்!


    2021ம் ஆண்டில் பெரும்பாலான நிறுவனங்கள் கொரோனா காரணமாக ஒருவித அழுத்தத்தில் இருந்தன. தற்போது அவற்றின் பாதை நேர்மறையாக மாறியுள்ளது. இதனால் ஊதியத்தை அதிகளவு உயர்த்த அவை திட்டமிட்டுள்ளதாக ஏயான் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் பங்குதாரரான  நிதின் சேதி தெரிவித்துள்ளார்.

    இந்தியாவில் 2022ம் ஆண்டில் அதிக ஊதிய உயர்வு வழங்கும் துறைகளாக தகவல் தொழில்நுட்பம்,  இ.காமர்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் துறைகள் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 39 துறைகளைச் சேர்ந்த  1,300 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட தகவல் மூலம் இது தெரியவந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: